விளம்பரத்தில் ஓடும் திமுக அரசு..மக்களுக்கு ஏதாவது செய்யுங்க.. கொந்தளித்த எஸ்.பி வேலுமணி !

Published : May 02, 2022, 03:15 PM IST
விளம்பரத்தில் ஓடும் திமுக அரசு..மக்களுக்கு ஏதாவது செய்யுங்க.. கொந்தளித்த எஸ்.பி வேலுமணி !

சுருக்கம்

கோவை சுகுணாபுரம் பள்ளி வாசலில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி வேலுமணி தலைமையில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 300க்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் நோன்பு திறந்து உணவுகளை சாப்பிட்டு விரத்தத்தை முடித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, ‘இஸ்லாமியர்கள் நோன்பு காலத்தில் அவர்களுக்கு தேவையான உதவிகளை அதிமுக அரசு செய்து வந்தது. இஸ்லாமியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்தது அதிமுக அரசு. அதில் ஹஜ் பயணத்திற்கான தொகையை 10 கோடியாக உயர்த்தி கொடுத்தது மற்றும் நாகூர் தர்காவை மேம்படுத்த 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  மேலும் 3 ஆயிரம் பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்கினோம். 

மேலும் சிறுபான்மையினர் மக்களுக்கு என்று உறுதுணையாக இருப்போம்.  தற்போது கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மோசமாக இருப்பதாகவும், கடந்த அதிமுக அரசு காலத்தில் சாலைகள் திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பட்டதை ரத்து செய்துள்ளனர். சாலைகள் சீரமைக்கும் பணியை செய்யவில்லை, குடிநீர் வினியோகம் முறையாக இல்லை என்றார். கோவை மக்களை புறக்கணித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும், மாநகராட்சி ஸ்மார்ட்சிட்டி பணியை கிடப்பில் போட்டு வைத்துள்ளனர்.

விரைவில் விடுப்பட்ட பணிகளை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். நடந்து முடிந்த தேர்தலுக்கு பிறகு செயல்படாத மாநகராட்சி நிர்வாகமாக இருப்பதாக என குற்றச்சாட்டு வைத்தார். மேலும் தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது அனைவருக்கும் தெரியும். பாலியல் வழக்கு அதிகரித்துள்ளது எனவும் மக்களுக்கு பாதுகாப்பு தரும் அரசாக திமுக மாற வேண்டும் என்றார். விளம்பரத்தில் தான் தற்போதைய அரசு ஒடுகிறது எனவும், திமுக ஆட்சிக்கு வந்து மக்களுக்கு ஏதும் செய்யவில்லை இனியாவது செய்ய வேண்டும்’ என்று கூறினார்.

இதையும் படிங்க : யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைக்குறது.. 1,500 கோடி கமிஷன் போகுது.! பகீர் கிளப்பும் எடப்பாடி பழனிசாமி

இதையும் படிங்க : Alert : மே 14 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை..அரசு எடுத்த அதிரடி முடிவு !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!
எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!