அறிவாலயத்தில் ஐக்கியம் ஆன 3000 நாம் தமிழர் தம்பிகள்..?? சீமான் கோட்டையில் வெடி வைத்த ஸ்டாலின்.

Published : May 02, 2022, 02:20 PM ISTUpdated : May 02, 2022, 02:22 PM IST
அறிவாலயத்தில் ஐக்கியம் ஆன 3000  நாம் தமிழர் தம்பிகள்..?? சீமான் கோட்டையில் வெடி வைத்த ஸ்டாலின்.

சுருக்கம்

தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டிய; தமிழுக்குச் செம்மொழித் தகுதி பெற்றுத் தந்த இயக்கத்துக்கு வந்திருக்கிறீர்கள் கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழர்கள் அல்லாதோருக்கும் உதவுகிற அரசாகத் தி.மு.க அரசு விளங்குகிறது என  திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். 

தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டிய; தமிழுக்குச் செம்மொழித் தகுதி பெற்றுத் தந்த இயக்கத்துக்கு வந்திருக்கிறீர்கள்! கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழர்கள் அல்லாதோருக்கும் உதவுகிற அரசாகத் தி.மு.க அரசு விளங்குகிறது என  திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். இன்று (02-05-2022) சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவில் இணையும் விழாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலை வகித்து உரையாற்றினார். அதன் விவரம் வருமாறு:

ஏற்கனவே நம்முடைய ராஜீவ் காந்தி அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, அவர் ஊடகங்களில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று அழுத்தந்திருத்தமாக எடுத்து வைக்கும் விவாதங்களை எல்லாம் பார்க்கிறபோது உள்ளபடியே மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அவர் தன்னுடைய ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

நாம் இலங்கை தமிழர்களுக்கு அனுப்பி வைக்க உள்ள உணவு மருந்து பொருட்களுக்கு அதற்கு ஒன்றிய அரசு அனுமதி தர வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினோம். நிறைவேற்றியவுடன், நேற்று மாலையில் நமக்குச் செய்தி கிடைத்திருக்கிறது. தாராளமாக அனுப்புங்கள். நாங்கள் உதவி செய்ய காத்திருக்கிறோம். எங்கள் மூலமாக அனுப்பி வைக்கிறோம். ஒன்றிய அரசுக்கு அனுப்பி வையுங்கள் என்று அங்கிருந்து செய்தி வந்திருக்கிறது. 

எனவே தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களுக்காக மட்டுமல்லாமல், இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்காக மட்டுமல்லாமல், இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களையும் தவிர்த்து - அங்கிருக்கும் எல்லா மக்களுக்கும் நாம் துணை நிற்போம் என்று அந்த இந்நிலையில் நாம் நம்முடைய கடமையை ஆற்றிக்கொண்டிருக்கிறோம். இங்கே நம்முடைய ராஜீவ்காந்தி அவர்கள் பேசுகிறபோது சொன்னார், இதேபோல் சென்ற ஆண்டு 2-ஆம் தேதிதான் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கிறது. நாம் அமோகமான வெற்றியை பெற்றுக்கொண்டு வந்து கொண்டிருக்கிறோம் என்ற செய்திகள் வந்துகொண்டிருந்த நேரம் இந்த நேரம்தான்.

எனவே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றாலும், அதற்குப்பிறகு 5 நாட்கள் கழித்து மே7-ஆம் தேதி தான் நாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றோம். பதவிப்பிரமாணம் செய்து கொண்டோம். அந்த ஏழாம் தேதி வரப்போகிறது. ஒரு வருடம் நிறைவடையப்போகிறது. 10 வருடம் - 20 வருடம் ஆட்சியில் இருந்திருந்தால் என்ன செய்திருப்போமோ, அதை விடப் பலமடங்கு சாதனையை இந்த ஓராண்டு காலத்தில் நாம் செய்திருக்கிறோம். இவ்வளவுதானா? என்று கேட்காதீர்கள். இன்னும் செய்யப்போகிறோம்.

எதிர்க்கட்சிகள் ஓர் அரசியல் நோக்கத்தோடு, சட்டமன்றமாக இருந்தாலும் - மக்கள் மன்றமாக இருந்தாலும், எதிர்க்கட்சிகள் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று. எனக்கு அதற்கெல்லாம் பதில் சொல்ல நேரமில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சொன்னேன். ’நல்லது செய்வதற்கே எனக்கு நேரம் கிடைக்கவில்லை. கெட்ட செய்தி சொல்லிக் கொண்டிருக்கும் உங்களுக்கு பதில் சொல்வதற்கு நாங்கள் தயாராக இல்லை‘ என்பதைத்தான் நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

எனவே நம்முடைய கடமை மக்களுக்கு பணியாற்றுவது.அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதுபோல, ‘மக்களுக்கு பணியாற்று; மக்களோடு இரு; மக்களோடு சேர்ந்து பணியாற்று; மக்களுக்காக தன்னுடைய கடமையை ஆற்று” என்றுதான் நமக்கு தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். எனவே அதை மனதில் வைத்துக் கொண்டு நாம் நம்முடைய கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

இங்கே நம்முடைய அருமைச் சகோதரர் - நம்முடைய வழக்கறிஞர் - செய்தித் தொடர்பில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு தன்னுடைய கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் ராஜீவ்காந்தி அவர்கள், ஏற்கனவே இரண்டு - மூன்று முறை இந்த நிகழ்ச்சிக்கு தேதி கொடுத்து, ஆனால் பல்வேறு சூழ்நிலையின் காரணமாக கொரோனா தாக்குதல் இருந்த காரணத்தினால், ஒட்டுமொத்தமாக இங்கு கூட்ட முடியாது ஒரு சூழ்நிலை இருந்த காரணத்தினால் தேதிகள் அடிக்கடி தள்ளிவைக்கப்பட்டது.

தள்ளிவைக்கப்பட்ட அந்த தேதி, அதற்குபிறகு இன்று முடிவு செய்யப்பட்டு இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. எனவே ராஜீவ்காந்தி அவர்கள் ஆற்றலைப் பார்த்து, நான் மட்டுமல்ல; நம்முடைய பொதுச் செயலாளர் மட்டுமல்ல; பொருளாளர் மட்டுமல்ல; கழகத்தில் இருக்கும் முன்னணியினர் மட்டுமல்ல; எல்லாத் தரப்பு மக்களும் அவருடைய ஆற்றலை - அவருடைய திறமையைப் பாராட்டுகிறார்கள். அந்த ஆற்றல் - அந்தத் திறமை இன்றைக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கிடைத்திருக்கிறது என்பதில் உள்ளபடியே நாங்கள் பெருமைப்படுகிறோம்.

எனவே உங்கள் தொண்டு வளர - உங்கள் தொண்டு தொடர என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து, வந்திருக்கும் அனைவரையும் கழகத்தின் தலைவர் என்கிற முறையில் நான் மட்டுமல்ல, என்னையும் - நம்மையும் - அனைவரையும் ஆளாக்கிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களின் சார்பில் உங்கள் அத்தனை பேரையும் வருக வருக வருக என வரவேற்று என் உரையை நிறைவு செய்கிறேன் இவ்வாறு அவர் உரையாற்றினார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!
எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!