நீ கற்புக் கரசியா டீ.. மனைவியின் கையில் கற்பூரம் ஏற்றி கணவன் சைகோத் தனம். வலை வீசு தேடும் போலீஸ்.

Published : May 02, 2022, 01:22 PM ISTUpdated : May 02, 2022, 01:25 PM IST
நீ கற்புக் கரசியா டீ.. மனைவியின் கையில் கற்பூரம் ஏற்றி கணவன் சைகோத் தனம். வலை வீசு தேடும் போலீஸ்.

சுருக்கம்

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட கணவன் கையில் கற்பூரம் ஏற்றி கொடுமைப்படுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தலைமறைவான கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.  

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட கணவன் கையில் கற்பூரம் ஏற்றி கொடுமைப்படுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தலைமறைவான கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காதலிப்பது போல நடித்து  கற்பழிப்பது. காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசுவது, திருமணம் செய்து கொண்டு பின்னர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது. நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டால் மனைவியை அடித்து துன்புறுத்துவது போன்ற எண்ணற்ற கொடுமைகள் பெண்கள் அனுபவித்து வருகின்றனர். இந்த வரிசையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட கணவன் அந்தப் பெண்ணைப் பல்வேறு வகையில் டார்ச்சர் செய்து துன்புறுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் வேம்கல், வீரனஹல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார் அவர். ஒருகட்டத்தில் மனைவியை அடித்து  துன்புறுத்தும் நிலைமை விஷயம் சென்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற கணவன் ஆனந்தன் மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுப்ட்டார், உனது நடத்தையில் எனக்கு சந்தேகம் இருக்கிறது, நீ கற்புக்கரசியா என்பதை உடனே நிரூபித்து காட்டு என கூறியதுடன் மனைவியின் உள்ளங் கையில் கற்பூரத்தை ஏற்றினார்.

கற்பூரம் அணையும் வரை அதை கீழே போடக்கூடாது என கூறி கொடுமைப்படுத்தினார். அதில் அந்த பெண்ணின் கை முழுவதும் தீ பரவி எரிந்தது. இதனால் அந்த பெண்ணின் கை கருகியது. தீக்காயத்தால் அவர் மனைவி கதறி துடித்தார். ஆனாலும் ஆனந்தன் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை இந்நிலையில் ஆனந்த்  தனக்கு ஏற்பட்ட நிலைமை குறித்தும், தான் சந்தித்துவரும் கொடுமை குறித்தும் தனது பகுதியில் உள்ள சமூக ஆர்வலரிடம் புகார் கூறினார் இந்நிலையில் அந்தப் பெண்ணை சமூக ஆர்வலர் மருத்துமனையில் அனுமதித்தார். சம்பவம் தொடர்பாக அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வேம்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தலைமறைவாக உள்ள மனைவியின் கையில் கற்பூரம் ஏற்றி கொடுமைப்படுத்திய கணவனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!
எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!