இபிஎஸ் ஆட்சியை வேண்டாமென்றவர்கள் UPSஐ தேடுகிறார்கள்.. சீனாக சீனுக்கு வரும் ராஜேந்திர பாலாஜி.!

Published : May 02, 2022, 12:38 PM IST
இபிஎஸ் ஆட்சியை வேண்டாமென்றவர்கள் UPSஐ தேடுகிறார்கள்.. சீனாக சீனுக்கு வரும் ராஜேந்திர பாலாஜி.!

சுருக்கம்

தமிழகத்தின் நிலவரம் கலவரமாக உள்ளது. திமுக ஆட்சியை மக்கள் விரும்பவில்லை. தமிழகத்தில் அதிமுக ஆட்சி விரைவில் மலர உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் என்றும் ராஜேந்திர பாலாஜி குறிப்பிட்டார்.

திமுக எப்போது ஆட்சிக்கு வந்ததாலும் மின்வெட்டு பிரச்சனை ஏற்படுவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

புலம்பும் மக்கள்

சிவகாசியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, நான் குண்டக்கமண்டக்க பேசுவேன், ஆனால் உண்மையைத்தான் பேசிவேன். தேனிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மின்சாரத்தை காணவில்லை என மக்கள் புகார் அளித்துள்ளார்கள். திமுக ஆட்சியில் மின் கம்பியில் அணில் நின்றால் மின்சாரம் தடைபடுகிறது. மக்கள் புலம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார்.

மின்வெட்டு பிரச்சனை

இபிஎஸ் ஆட்சியை வேண்டாம் என்று கூறி மக்கள் தற்பொழுது யூபிஎஸ் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். திமுக எப்போது ஆட்சிக்கு வந்ததாலும் மின்வெட்டு ஏற்படுவதாக குற்றம்சாட்டினார். திமுக எதற்கு எடுத்தாலும் ஆளுநரை குற்றம் சொல்லி வருகிறது. ஆளுநர் அதிகாரத்தில் யாரும் தலையிடக் கூடாது. திமுகவிற்கு வாக்கு வங்கியே கிடையாது, அதிமுகவில் பிளவு ஏற்படும்போது மட்டுமே ஆட்சிக்கு வரும் கட்சி திமுக என்று விமர்சித்தார்.

விரைவில் அதிமுக ஆட்சி

மேலும், தமிழகத்தின் நிலவரம் கலவரமாக உள்ளது. திமுக ஆட்சியை மக்கள் விரும்பவில்லை. தமிழகத்தில் அதிமுக ஆட்சி விரைவில் மலர உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் என்றும் ராஜேந்திர பாலாஜி குறிப்பிட்டார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Thaimaman Thanga Mothiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் யாருக்கெல்லாம் கிடைக்கும்? தொடங்கியது கணக்கெடுப்பு..! பேரு குடுத்தாச்சா?
Rahul Gandhi: சாதி ரீதியான சர்ச்சை பேச்சு? ராகுல் காந்தி மீது பாய்ந்தது வழக்கு!