மகள்களை மட்டும் ஏன் இப்படி வளர்க்குறீங்க.. மகன்களுக்கு கட்டுப்பாடு இல்லையா ? அட்வைஸ் செய்த தமிழிசை !

By Raghupati RFirst Published May 2, 2022, 11:53 AM IST
Highlights

மகள்களைப் போல் மகன்களையும் கட்டுபாட்டுடன் வளர்க்க வேண்டும் என்று தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

சென்னை பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், 'மாணவர் பருவம் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான பருவம். இந்த பருவத்தில் நன்றாக படிக்க வேண்டும். திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். கல்லூரி வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். தப்பில்லை. ஆனால் எல்லாவற்றையும் ஒரு கட்டுப்பாட்டுடன் கொண்டாடுங்கள் அது உங்கள் வளர்ச்சிக்கு பலம் சேர்க்கும்.

படிப்பிலும் திறமைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துவது போல் குடும்ப வாழ்க்கையிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் குடும்ப வாழ்க்கையும் சரியான கால கட்டத்தில சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும். நான் ஒரு மருத்துவர் என்ற ரீதியில் சொல்கிறேன். குழந்தை வளர்ப்பில் கவனமும், பாரபட்சமும் காட்டக் கூடாது. மகள்களாக இருந்தால் இத்தனை மணிக்குள் வீட்டுக்கு வந்து விட வேண்டும். 

ஆண்களுடன் பழகக்கூடாது. வெளியே சுற்றக்கூடாது. உடை விஷயத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பல கட்டுப்பாடுகளை விதிக்கிறோம். அதை கண்காணிக்கிறோம். ஆனால், மகன்கள் விஷயத்தில் கண்டிப்பும், கட்டுப்பாடும் இல்லாததால் சந்தர்ப்ப சூழ்நிலை அவர்களை தடம் புரளவைக்கிறது. ஆண்களை சரிசெய்யும் போது பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். மகள்களை போல் மகன்களையும் கட்டுப்பாட்டுடன் வளருங்கள்' என்றார்.

இதையும் படிங்க : யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைக்குறது.. 1,500 கோடி கமிஷன் போகுது.! பகீர் கிளப்பும் எடப்பாடி பழனிசாமி

இதையும் படிங்க : Alert : மே 14 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை..அரசு எடுத்த அதிரடி முடிவு !

click me!