யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைக்குறது.. 1,500 கோடி கமிஷன் போகுது.! பகீர் கிளப்பும் எடப்பாடி பழனிசாமி

By Raghupati RFirst Published May 2, 2022, 11:20 AM IST
Highlights

கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில் நடைபெற்ற மே தின விழா கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். 

மே தின விழா கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து பதினோரு மாதம் நிறைவடையும் நிலையில் எவ்வித திட்டங்களையும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவையும் கட்டிமுடிக்கப்பட்ட பணிகளுக்கு திறப்பு விழாவை மட்டுமே முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்தபின் மின்வெட்டு அதிகரித்துள்ளது விவசாயிகள் தொழிலாளர்கள் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மின்வெட்டு வரும் என நாங்கள் பலமுறை எச்சரித்தும் திமுக அரசு சரியான முறையில் நடவடிக்கை மேற்கொள்ளாததால் தற்பொழுது மின் வெட்டு காரணமாக விவசாயிகள் வேளாண் பணிகளை நிறைவேற்ற முடியவில்லை. தொழிற்சாலைகள் சரியாக செயல்படாததால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என குற்றச்சாட்டினார். கடந்த பத்தாண்டு காலமாக வெளிநாடுகள் மூலமாக கொள்ளையடித்த பணத்தை கொண்டு வருவதற்காக ஸ்டாலின் வெளிநாடு சென்றார். 

சட்டமன்றத்தில் மருத்துவ சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என 11 மருத்துவக்கல்லூரிகள் கொண்டு வந்ததாக அப்பட்டமாக பொய் சொல்கிறார். அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசிடம் பேசி 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தோம். இன்னமும் சொல்லப்போனால் கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கி மருத்துவ கல்லூரி கொண்டு வந்ததே அதிமுக தான்.  திமுக தலைவர் கருணாநிதி உயிரோட இருக்கும்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்படவில்லை. ஆனால் கருணாநிதி கூறியதை போல் திமுக மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்ததாக அப்பட்டமாக பொய் சொல்கின்றனர்.

யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது எனவும் கடுமையாகத் தாக்கிப் பேசினார். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி இன்று கடுமையான விலைவாசி ஏறி விட்டது எனவும் கட்டுமான பொருட்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்து விட்டது எனவும் இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் . ஆனால் சிமெண்ட் விலை உயர்வின் காரணத்தினால் நாளொன்றுக்கு திமுக அரசுக்கு 1500 கோடி கமிஷன் செல்கிறது எனவும் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க : Alert : மே 14 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை..அரசு எடுத்த அதிரடி முடிவு !

இதையும் படிங்க : நாள் குறித்த அறிவாலயம்.. அமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. பரபரக்கும் கோட்டை வட்டாரங்கள் !

click me!