அதிமுகவை இனி யாராலும் ஜெயிக்க முடியாது.. ஆட்டத்தை இனிமேல் பார்க்க போறீங்க.. ஓங்கி அடித்த ஓபிஎஸ்.

Published : May 02, 2022, 03:03 PM IST
அதிமுகவை இனி யாராலும் ஜெயிக்க முடியாது.. ஆட்டத்தை இனிமேல் பார்க்க போறீங்க.. ஓங்கி அடித்த ஓபிஎஸ்.

சுருக்கம்

 ஆண்களுக்கு நிகராக பெண்களையும் ஸ்கூட்டி ஒட்டவைத்தது அம்மாதான், ஆனால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் கொடுப்பேன் என்றார்கள் கொடுத்தார்களா? என தொண்டர்களிடம் ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த திட்டங்களையே முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். இனி யாராலும் வெல்ல முடியாது இயக்கமாக அதிமுக உள்ளது என்றும், இனி எந்த தேர்தல் வந்தாலும் அதில் அதிமுக தான் வெற்றி பெறும் என்றும் பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் திமுகவில் இரட்டைத்தலைமை நிலவுகிறது. இதுவரை சந்தித்த தேர்தல்கள் அனைத்திலும் அதிமுக படுதோல்வியையோ அடைந்துள்ளது. இதற்கிடையில் கட்சியை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா ஈடுபட்டு வரும் அதே நேரத்தில் ஓபிஎஸ்- இபிஎஸ் அவரை கட்சியில் இணைப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்து வருகின்றனர்.

அதேபோல் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் என்று நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் மே தினத்தையொட்டி அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் சென்னை புரசைவாக்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பன்னீர்செல்வத்திற்கு கட்சித் தொண்டர்கள் ஆளுயர மாலை அணிவித்து கிருஷ்ணர் சிலையை பரிசாக வழங்கினர். அப்போது அக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக தமிழகத்தில் செயற்கை மின்வெட்டு ஏற்படுத்தியுள்ளது, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு 7,000 கோடி ரூபாயில் 7 டன் தங்கம் வழங்கிய ஒரே அரசு அதிமுக அரசுதான் என்றார். 

ஆனால் தற்போது அத்தகைய திட்டத்தை திமுக நிறுத்தி விட்டது என குற்றம் சாட்டினார். அவரைத் தொடர்ந்து மேடையில் உரையாற்றிய ஓ பன்னீர்செல்வம் அதிமுகவை அழிக்க திமுக முயற்சி செய்தபோதும்  எம்ஜிஆர் தொடர்ந்து முதலமைச்சராக இருந்தார். அவரைப் பின்பற்றி ஜெயலலிதா 30 ஆண்டுகாலம் பொதுச்செயலராக இருந்தார், 30 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆண்ட கட்சி அதிமுக என்றார். உழைப்பவரே உயர்ந்தவர் என்றுதான் எம்ஜிஆர் கையெழுத்திடுவார் தேர்தல் வந்தால் திமுக பொய் சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளது, 505 வாக்குறுதிகளை திமுக அளித்துள்ளது,  திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது ஆனால் உருப்படியாக எந்த திட்டத்தையும் செய்யவில்லை, குருவிக்கு கூட கூடுகள் உள்ளது ஆனால் ஏழைகளுக்கு வீடுகள் இல்லை என்பதால்  6.5 லட்சம் ஏழைகளுக்கு தரமான வீடுகளை கட்டிக் கொடுத்தவர் ஜெயலலிதா. எங்களுக்கு  பெண்களின் பாதுகாப்பையும் வாழ்க்கையையும் உறுதி செய்யும் வகையில் ஏராளமான பல்வேறு சமூக நலத் திட்டங்களை உருவாக்கிக் கொடுத்தவர் ஜெயலலிதா.

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் கடந்த அதிமுக ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதைத்தொடர்ந்து நிறைவேற்றினார். ஆனால் தற்போது திமுகவில் இருந்த திட்டத்தை நிறுத்தியுள்ளனர். அதேபோல் ஆண்களுக்கு நிகராக பெண்களையும் ஸ்கூட்டி ஒட்டவைத்தது அம்மாதான், ஆனால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் கொடுப்பேன் என்றார்கள் கொடுத்தார்களா? என தொண்டர்களிடம் ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் படித்த பட்டதாரிகளின் எண்ணிக்கை 52 சதவீதம் அளவுக்கு உயர ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையே காரணம். மொத்தத்தில் ஜெயலலிதா அவர்கள் தொடங்கி வைத்த திட்டங்களையே முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார்.  வருங்காலத்தில் யாராலும் வெல்ல முடியாத இயக்கமாகவும் இனி எந்த தேர்தல் வந்தாலும் அதில் வெற்றி பெறுகிற  கட்சியாக அதிமுக நிலைத்து வந்துள்ளது என அவர் கூறினார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!
எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!