பொங்கல் நம்முடைய பாரம்பரிய பண்டிகை, வீட்டில் சந்தோஷம் கொடுக்கும் பண்டிகை இது.தமிழக அரசின் பொங்கல் பரிசு வெட்க கேடானது. ஒரு கரும்பு, ஆயிரம் ரூபாய் பிச்சை கொடுப்பது போன்றது என நடிகை குஷ்பு விமர்சித்தார்.
பொங்கல் கொண்டாடிய குஷ்பு
தமிழக பாஜகவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சர்ச்சை ஏற்பட்டு வருகிறது. டெய்சி-சூர்யா சிவா மோதல், காயத்திரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகல் என அடுத்தடுத்து பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென குற்றச்சாட்டை காயத்திரி ரகுராம் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து இந்த சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக கேள்வி எழுப்பியதால் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு சுந்தர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை..! புறக்கணிக்க திமுக கூட்டணி கட்சிகள் திடீர் முடிவு.?
பொங்கல் பரிசு- வெட்ககேடானது
கோவையில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பாஜக சார்பில் நடைபெற்ற ரேக்ளா பந்தயம் மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு சுந்தர் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த நடிகையும் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, தமிழ்நாடு என்பதை தமிழகம், தமிழ்நாடு என்றும் அழைக்கலாம் அது தவறில்லை எனவும் எப்படி அழைத்தாலும் இந்தியாவின் ஒரு அங்கம் தான் தமிழ்நாடு என கூறினார். தமிழக அரசின் பொங்கல் பரிசு வெட்க கேடானது என தெரிவித்தவர், ஒரு கரும்பு, ஆயிரம் ரூபாயும் கொடுப்பது பிச்சை கொடுப்பது போன்று உள்ளதாக கூறினார்.
பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு.?
தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப்பதாக சொல்லும் திராவிட அரசு இவ்வளவு கேவலாமாக நடந்துக் கொள்ளகூடாது என தெரிவித்தார். பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென வெளியாகியுள்ள புகார் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. பாஜகவில் இருந்து எல்லா பெண்களும் வெளியே போகவில்லை. நானும் கட்சியில் தானே இருக்கிறேன் . திமுகவில் தான் பெண்களுக்கு எதிராக பேசினார்கள். அப்படிப்பட்ட நிலையில் தான் பாஜக தான் ஆதரவாக நின்றதாக கூறினார்.
இதையும் படியுங்கள்