கருணாநிதி மன்னிப்பு கேட்டதை நினைவுபடுத்திய துரைமுருகன்..! தேம்பி தேம்பி அழுத டி.ஆர் பாலு

By Ajmal KhanFirst Published Jan 8, 2023, 12:07 PM IST
Highlights

நான் தலைவனா.? நீ தலைவனா.? என கூறி டி.ஆர் பாலுவை கருணாநிதி திட்டியதாகவும், இதனால் கோபித்துக்கொண்டு சென்ற டி.ஆர் பாலுவிடம் கருணாநிதி மன்னிப்பு கேட்டதை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நினைவுப்படுத்தியதையடுத்து டி ஆர் பாலு தேம்பி, தேம்பி அழுதார். 

டிஆர் பாலு- கருணாநிதி மோதல்

நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு எழுதிய பாதை மாறா பயணம் நூல் வெளியீட்டு விழா அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று புத்தகத்தை வெளியிட,  முதல் பிரதியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக தலைவர் கருணாநிதியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். ஒரு சம்பவத்தின் போது டி. ஆர் பாலுக்கும் கருணாநிதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகும் அப்போது தான் சொல்வது தான் சரி என  டி.ஆர் பாலுவும், தான் சொல்லுவது தான் சரியென கருணாநிதியும் மோதிக்கொண்டதாக தெரிவித்தார்.

திராவிட கொள்கைக்கு எதிரானவர் ஆர்.என்.ரவி..! சட்டப்பேரவையில் உரையாற்ற தகுதியில்லை- திருமாவளவன் ஆவேசம்

கோவித்துக்கொண்டு சென்ற டி ஆர் பாலு 

அப்போது கோபப்பட்ட கருணாநிதி நான் தலைவனா.? நீ தலைவனா .? நான் சொல்வது தான் சரி என கருணாநிதி கூறியதாக தெரிவித்தார். இதனால் டி ஆர் பாலு கோபித்துக் கொண்டு சென்றதாகும் கூறினார். மடையன் ஒன்றும் தெரியாமல் பேசுகிறான் என டிஆர் பாலுவை கருணாநிதி கடிந்து கொண்டதாகவும் தெரிவித்தார். ஒரு சில நிமிடங்கள் கழித்து நான் போய் குளித்து விட்டு வருகிறேன் என்று கூறி சென்ற கருணாநிதி குளித்துவிட்டு வந்த பொழுது நான் யோசித்துப் பார்த்ததாகும் அப்போது டி ஆர் பாலு கூறியது தான்  சரியா இருக்கும் என நினைப்பதாகும் தெரிவித்தார். உடனே டி ஆர் பாலுவை கூப்பிடு என சொன்னதாகவும் ஆனால்  அவர் நீங்க திட்டின திட்டிற்கு தாம்பரத்தை தாண்டி சென்று இருப்பார் என தான் கூறியதாக குறிப்பிட்டார். 

“அரசியல் அமாவாசை கேகேஎஸ்எஸ்ஆர்” சாத்தூரில் அதிமுகவினர் ஆர்பாட்டம்

மன்னிப்பு கேட்ட கருணாநிதி

அப்போது டி ஆர் பாலுவை வரச்சொல் கருணாநிதி கூறியதை தொடர்ந்து டி ஆர் பாலுவை  போன் செய்து வர சொன்னதாகவும் ஆனால் வர மறுத்ததாகும் தெரிவித்தார்.  இதனையடுத்து  வீட்டிற்கு வந்த  டி.ஆர் பாலுவை பார்த்து நீ சொன்னதுதான் சரி  என தெரிவித்ததாகவும் என்னை மன்னித்துவிடு என கருணாநிதி கூறியதாக துரைமுருகன் தெரிவித்தார்.  

தேம்பி தேம்பி அழுத டி ஆர் பாலு

இந்த சம்பவத்தை துரைமுருகன் விவரித்து கொண்டு இருக்கும் பொழுது டி ஆர் பாலு  தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். தனது கை குட்டையை எடுத்து கண்களில் வழிந்த கண்ணீரை டி.ஆர்.பாலு துடைத்துக் கொண்டார் இந்த சம்பவம் பார்வையாளர்களை  வியக்க வைத்தது

இதையும் படியுங்கள்

ஆளுநர் உரையோடு நாளை தொடங்குகிறது சட்டப்பேரவை கூட்டம்.!ஓபிஎஸ்க்கு இருக்கை ஒதுக்கீடு.! இபிஎஸ் அணி பங்கேற்குமா?
 

click me!