15 ஆண்டு கால பகை..! காத்திருந்து திருமாவை பழி தீர்த்த குஷ்பு... பரபர பின்னணி..!

By Selva KathirFirst Published Oct 28, 2020, 1:29 PM IST
Highlights

கடந்த 2005ம் ஆண்டு இந்திய டுடே வார இதழ் செக்ஸ் தொடர்பான ஒரு ஆய்வு நடத்தி வெளியிட்டது. அதில் திருமணத்திற்கு முன்னரே பெரும்பாலான பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வதாக இந்தியா டுடே வார இதழ் கூறியிருந்ததை. இது குறித்து கருத்து தெரிவித்த குஷ்பு தமிழ் பெண்களுக்கு கற்பு என்கிற ஒன்று தற்போது இல்லை என்கிற ரீதியில் பேசியிருந்தார். 

15 வருடங்களுக்கு முன்னர் தன்னை ஊர் ஊராக அலைய வைத்து நீதிமன்ற படியேற வைத்த திருமாவளவனை தற்போது நடிகை குஷ்பு பழி தீர்த்துள்ளார் என்றே சொல்லலாம்.

கடந்த 2005ம் ஆண்டு இந்திய டுடே வார இதழ் செக்ஸ் தொடர்பான ஒரு ஆய்வு நடத்தி வெளியிட்டது. அதில் திருமணத்திற்கு முன்னரே பெரும்பாலான பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வதாக இந்தியா டுடே வார இதழ் கூறியிருந்ததை. இது குறித்து கருத்து தெரிவித்த குஷ்பு தமிழ் பெண்களுக்கு கற்பு என்கிற ஒன்று தற்போது இல்லை என்கிற ரீதியில் பேசியிருந்தார். அதோடு மட்டும் இல்லாமல் தமிழகத்தில் திருமணத்திற்கு முன்னரே பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வதாகவும் குஷ்பு தெரிவித்திருந்தார்.

மேலும் திருமணத்திற்கு முன்னர் செக்சில் ஈடுபடும் பெண்கள் தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் குஷ்பு தனது அறிவுரைகளை கூறியிருந்தார். குஷ்புவின் இந்த கருத்து அப்போது பெரும் சர்ச்சையானது. இந்த விவகாரத்தை பாமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கையில் எடுத்தனர். அதிலும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் குஷ்புவுக்கு எதிராக போராட்டம் அறிவித்தார். நடிகை குஷ்பு தமிழ் பெண்களையும் கற்பையும் இழிவுபடுத்திவிட்டதாக ஆவேசமாக பேசினார்.

தமிழகம் முழுவதும் நடிகை குஷ்புவுக்கு எதிராக இதனால் கொந்தளிப்பு உருவானது. நடிகை குஷ்பு வீட்டை தாக்க சிலர் முயற்சி செய்தனர். குஷ்பு தமிழகத்தில் எங்கு நடமாட முடியாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மிரட்டினர். திருமாவளவனும் கூட உடனடியாக தனது கருத்துகளை குஷ்பு திரும்ப பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எச்சரித்தார். இந்த நிலையில் நடிகை குஷ்பு சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். அவர் சென்னையில் இருந்தால் தாக்கப்படுவோம் என்று அஞ்சி வெளிநாட்டிற்கு தப்பிவிட்டதாக கூறப்பட்டது.

அதோடு மட்டும் அல்லாமல் சிங்கப்பூர் வாழ் தமிழர்களும் குஷ்புவுக்கு எதிராக கொந்தளித்தனர். இதனால் நடிகை குஷ்பு அவசர அவசரமாக மீண்டும் சென்னை திரும்பினார். சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பிய கையோடு ஜெயா டிவிக்கு ஒரு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் தான் தமிழ் பெண்களை இழிவுபடுத்தவில்லை என்று அவர் கூறினார். மேலும் இந்தியா டுடே நடத்திய ஆய்வுக்கு எனது கருத்துகளை மட்டுமே கூறியதாகவும், தமிழ் பெண்களின் கற்பு குறித்து தான் தவறாக எதுவும் உள்நோக்கத்துடன் பேசவில்லை என்று கண்ணீர் விட்டு கதறினார்.

அதோடு மட்டும் அல்லாமல் தான் பேசியிருந்தது யாருக்கேனும் வருத்தத்தை தந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் குஷ்பு கண் கலங்கினார். இருந்தாலும் கூட நடிகை குஷ்புவுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் நடிகை குஷ்பு நீதிமன்றம் நீதிமன்றமாக ஏறி இறங்க நேரிட்டது. இந்த வழக்குகளை போட்டது பெரும்பாலும் விசிக வழக்கறிஞர்கள் மற்றும் அந்த கட்சியை சேர்ந்தவர்கள். இப்படி நடிகை குஷ்பு அரசியலுக்கு வருவதற்கு முன்னரே அவரை வைத்து திருமாவளவன் விளம்பரம் தேடிக் கொண்டார். ஏனென்றால் அந்த காலகட்டத்தில் திருமாவிற்கு அப்படி ஒரு விளம்பரம் தேவைப்பட்டது.

இந்த நிலையில் தான் அதே பெண்களின் கற்பு குறித்த சர்ச்சையில் திருமா சிக்கியுள்ளார். மனு நூலில் கூறியுள்ளதாக சில கருத்துகளை திருமா கூற அதனை வெட்டி ஒட்டு தமிழ் பெண்களையும் அதிலும் இந்துப் பெண்களை திருமா விபச்சாரிகள் என்று கூறிவிட்டதாக பாஜக பிரச்சனையை கிளப்பியது. அடுத்த நொடியே நடிகை குஷ்பு களத்தில் இறங்கினார். சென்னை கமலாலயத்தில் திருமாவிற்கு எதிராக பிரஸ் மீட் நடத்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மிரட்டினார். போதாக்குறைக்கு திருமாவின் தொகுதியான சிதம்பரத்தில் போராட்டத்தையும் அறிவித்தார்.

அந்த போராட்டத்திற்கு செல்லும் போது தான் கைது செய்யப்பட்டு ரிசார்ட்டில் குஷ்பு அடைக்கப்பட்டார். அதாவது எந்த கற்பு விவகாரத்தை வைத்து தன்னை கண்ணீர் விட்டு திருமா கதற வைத்தாரோ அதே விவகாரத்தை வைத்து தற்போது திருமாவை வியர்க்க வைத்துள்ளார் குஷ்பு என்றே கூறலாம். ஏனென்றால் குஷ்பு நடத்திய போராட்டத்தை தொடர்ந்து ஆங்காங்கே திருமாவிற்கு எதிராக பல்வேறு பெண்கள் வீடியோ வெளியிட ஆரம்பித்துள்ளனர். திருமா மன்னிப்பு அல்லது வருத்தம தெரிவிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

click me!