
கோவை ஈஷா யோகா மையத்தில் ‘யக்ஷா’ கலைத் திருவிழா இன்று (மார்ச் 8) கோலாகலமாக தொடங்கியது.
இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மஹாசிவராத்திரிக்கு முந்தைய 3 நாட்கள் ‘யக்ஷா’ கலைத் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டு விழா மார்ச் 8 முதல் 10 வரை நடக்க உள்ளது. முதல் நாளான இன்று பிரபல ஹிந்துஸ்தானி பாடகி திருமதி.கவுசிகி சக்ரபோர்த்தி அவர்களின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. சங்கீத் ரிசர்ச் அகாடமியின் முன்னாள் மாணவியான இவர் தன் பாடல் திறமையால் பி.பி.சி விருதை பெற்றவர். இவரது தந்தை திரு.அஜோய் சக்ரபோர்த்தியும் ஹிந்துஸ்தானி பாடகர் ஆவார்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.