விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : சுவையான தேங்காய் பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி?

By Asianet TamilFirst Published Aug 30, 2024, 7:21 PM IST
Highlights

விநாயகர் சதுர்த்திக்கு விசேஷமாக செய்யப்படும் தேங்காய் பூரண கொழுக்கட்டை செய்முறை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். தேங்காய், வெல்லம், அரிசி மாவு பயன்படுத்தி எளிதாக கொழுக்கட்டை செய்ய பதிவை படியுங்கள்.

முழுமுதற் கடவுளான விநாயகர் அவதரித்த தினம் தான் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. விநாயகர சதுர்த்திக்கு பலரும் தங்களின் வீடுகளை சுத்தப்படுத்தி, விநாயகர் சிலையை அலங்கரித்து அவருக்கு பிடித்தமான பலகாரங்களை படைத்து விநாயகரை வழிபடுவது வழக்கம். அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி என்றாலே நம் நினைவுக்கு வரும் பலகாரம் என்றால் அது கொழுக்கட்டை தான். கொழுக்கட்டைகளில் பல வகை இருந்தாலும் பலருக்கும் பிடித்தமானது தேங்காய் பூரண கொழுக்கட்டை தான். இந்த கொழுக்கட்டையை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் :

Latest Videos

அரிசி மாவு – 1 கப்
உப்பு – ½ டீ ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
பூரணம் செய்ய  :
தேங்காய் ½ கப் துருவியது
வெல்லம் – ¼ கப்

செய்முறை :

முதலில் வெல்லத்தை தட்டி, வெதுவெதுப்பான நீரில் போட்டு அடுப்பில் வைக்க வேண்டும். வெல்லம் கரைந்து தண்ணீர் கெட்டியாகும் வரை சூடேற்றி இறக்கி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்தும் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தேங்காயை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி நாளில் கண்டிப்பா செய்யவே கூடாத விஷயங்கள் என்னென்ன?

பின்னர் வடிகட்டி வைத்த வெல்லப்பாகை அடுப்பில் வைத்து கிளற வேண்டும். வெல்லாப்பாகு தேன் போன்று கெட்டியாகும் நிலையில் வதக்கி வைத்துள்ள தேங்காயை சேர்ந்த்து கிளறி, ஏலக்காய் பொடி, 3-4 நிமிடம் நன்கு வதக்கி இறக்க வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை சேர்த்து, அதில் உப்பு சேர்த்து கிளறவும். பின்னர் சுடுநீரை மெதுவாக ஊற்றிக்கொண்டே கறண்டியை வைத்து மாவை கிளறி கை பொறுக்கும் சூடு வந்த உடன் கைகளால் மாவை நன்கு பிசைந்து தனியாக வைத்து கொள்ளவும்.

விநாயகர் சதுர்த்திக்கு பின்னாடி இப்படி ஒரு சம்பவமா? சுவாரஸ்யமான தகவல்கள்!!  

பின்னர் பிசைந்து வைத்துள்ள மாவை சிறிது எடுத்து உருண்டையாக உருட்டி, அதனை வட்டமாக தட்டி, அதில் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த பூரணத்தை ஒரு ஸ்பூன் வைத்து அதை கொழுக்கட்டையாக செய்ய வேண்டும். எல்லா கொழுக்கட்டைகளையும் செய்த பின்னர், இட்லி பாத்திரத்தில் அவற்றை வைத்து வேக வைத்து இறக்கினால் தேங்காய் பூரணக் கொழுக்கட்டை தயார்!
 

click me!