கானாங்கெளுத்தி மீன் புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தது, இதய ஆரோக்கியம், நீரிழிவு மேலாண்மை, இரத்த அழுத்தக் கட்டுப்பாடு மற்றும் மனநிலையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
இந்தியாவில் மிகவும் பரவலாக நுகரப்படும் மீன் வகைகளில் கானாங்கெளுத்தி மீனும் ஒன்றாகும். மீன் வகைகளில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன. அந்த வகையில் கானாங்கெளுத்தி மீனில் புரதங்கள், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. எனவே இந்த மீன் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. கானாங்கெளுத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கானாங்கெளுத்தி மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது. இதய நோய்களை தடுப்பதில் இந்த கொழுப்பு அமிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் கானாங்கெளுத்தி மீனில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இந்த நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாகவும் உள்ளது. எனவே இந்த மீனை உண்பது பக்கவாதம், பெருந்தமனி தடிப்பு, மாரடைப்பு மற்றும் அரித்மியா போன்ற இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
40 வயசா? அப்ப இந்த 8 உணவுகளை தொட்டு கூட பாக்காதீங்க.. இல்லன்னா பிரச்சனைதான்!
கானாங்கெளுத்தியில் நல்ல அளவு ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இது கொழுப்பு தொடர்பான நோய்களை தடுக்க உதவுகிறது. மேலும் நல்ல கொழுப்பு நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. இந்த மீனை தொடர்ந்து உட்கொள்வதால், உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், உள்ளுறுப்பு கொழுப்பும் குறைகிறது.
உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்த அழுத்த அளவை கட்டுக்குள் வைத்திருக்க கானாங்கெளுத்தி மீனை தினமும் சாப்பிடலாம். இந்த மீனில் உள்ள அதிக அளவு பொட்டாசியம் சாதாரண இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது, மேலும் ரத்த அழுத்தம் தொடர்புடைய உடல்நல சிக்கல்களின் அபாயத்தை குறைக்கிறது.
கானாங்கெளுத்தியில் அழற்சி எதிர்ப்பு கலவைகள் உள்ளன, இது முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு வலி மற்றும் தசைகளின் விறைப்பைக் குறைக்க உதவுகிறது. மருந்து உட்கொள்ளும் போது இந்த மீனை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது மருந்துகளின் செயல்திறனை அதிகரிப்பதன் மூலம் உங்கள் வலியை குறைக்க உதவும்.
அதிக அளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை உட்கொள்பவர்கள் மனச்சோர்வினால் பாதிக்கப்படும் அபாயம் குறைவு என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவே, உங்கள் தினசரி உணவில் கானாங்கெளுத்தி மீனை சேர்ப்பதன் மூலம், இந்த உணவு மனச்சோர்வினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பொதுவான மனநிலை மாற்றங்களைக் குறைக்க உதவுகிறது, கானாங்கெளுத்தியில் DHA (Docosahexaenoic acid) நிறைந்துள்ளது, மேலும் இந்த மீனை உட்கொள்வது அல்சைமர் நோய் மற்றும் பார்கின்சன் நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.
அறிவியல்ரீதியாக முட்டையை சைவம் என்கிறார்கள். ஏன் தெரியுமா?
கானாங்கெளுத்தி மீன்களில் நல்ல அளவு வைட்டமின் டி உள்ளது. எனவே இந்த மீன்புற்றுநோயாளிகள் தங்கள் உடல்நிலையை மேம்படுத்துவதோடு, நோயிலிருந்து தப்பிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஆராய்ச்சி ஆய்வுகள் நிரூபித்துள்ளன.