குட்டீஸ்களுக்கு பிடிச்ச ஸ்வீட் கார்ன் ப்ரைடு ரைஸ்... ரெசிபி இதோ!

By Kalai SelviFirst Published Sep 21, 2024, 2:45 PM IST
Highlights

Sweet Corn Fried Rice : குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்வீட் கார்ன் ப்ரைடு ரைஸ் செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

இன்று மதியம் வித்தியாசமான சுவையில் வெரைட்டி ரைஸ் ஏதாவது சாப்பிட விரும்புகிறீர்களா? ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லையா? உங்களுக்கான பதிவு தான் இது. பொதுவாகவே வெரைட்டி ரைஸ் பல வகைகள் உண்டு. முட்டைக்கோஸ் ரைஸ் வெஜ் ரைஸ், எக் ரைஸ், சிக்கன் ரைஸ், பன்னீர் ரைஸ் ஏன் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு லிஸ்ட் பெருசு. அந்த வகையில் இன்றைய பதிவில் நாம் பார்க்க போக ரெசிபி தான் ஸ்வீட் கார்ன் ஃப்ரைடு ரைஸ். இதுவரை இந்த ரெசிபியை நீங்கள் சாப்பிடவில்லை என்றால் இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். 

இந்த ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்பவே வித்தியாசமான சுவையில் மிகவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த ரெசிபி செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது, மிகவும் சீக்கிரமே செய்து முடித்து விடலாம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கூட மதிய உணவாக இந்த ரெசிபியை நீங்கள் செய்து கொடுக்கலாம். ஒருமுறை இந்த ரெசிபி உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் ஸ்வீட் கார்ன் ப்ரைடு ரைஸ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

Latest Videos

இதையும் படிங்க:  அட்டகாசமான சுவையில் காலிஃபிளவர் ரைஸ்... ஈசியா செய்ய ரெசிபி இதோ!!

ஸ்வீட் கார்ன் ப்ரைடு ரைஸ் செய்ய தேவையான பொருட்கள் :

வேக வைத்த பாசுமதி அரிசி - 3 கப்
ஸ்வீட் கான் - 1 கப் (வேக வைத்தது)
எண்ணெய் (அ) வெண்ணெய் - 2 ஸ்பூன்
பூண்டு - 2
பெரிய வெங்காயம் - 1( பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
மிளகுத்தூள் - 3/4 ஸ்பூன்
புதினா இலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
சோயா சாஸ் - 2 ஸ்பூன்
கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் - 4 (பொடியாக நறுக்கியது)
முட்டைகோஸ் - சிறிதளவு

இதையும் படிங்க:  வெறும் 10  நிமிடத்தில் டேஸ்டான வெஜ் பிரைடு ரைஸ்.. ரெசிபி இதோ!!

செய்முறை :

ஸ்வீட் கார்ன் ப்ரைடு ரைஸ் செய்ய முதலில், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் அல்லது வெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் நறுக்கிய பூண்டை போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதன்பிறகு அதில் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அடுத்ததாக அதில் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள். காய்கறிகள் நன்றாக வதங்கியதும் அடுத்ததாக அதில் எடுத்து வைத்த ஸ்வீட் கானை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள்.

அதன் பிறகு அதில் மிளகுத்தூள், சோயா சாஸ், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். இதனுடன் புதினா இலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது எடுத்து வைத்த சாதத்தை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். இறுதியாக பொடியாக நெறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை மேலே தூவுங்கள். அவ்வளவுதான் ருசியான ஸ்வீட் கார்ன் ஃப்ரைடு ரைஸ் ரெடி.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!