Thinai Upma Recipe : சுவையான மற்றும் சத்தான தினை உப்புமா செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
தினமும் காலை வீட்டில் உள்ளவர்களுக்கு இட்லி தோசை தான் செய்து குடிக்கிறீர்களா? அவர்களுக்கு அது சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? வித்தியாசமாக ஏதாவது செய்து தரும்படி கேட்கிறார்களா? ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லையா உங்களுக்கான பதிவு தான் இது.
உங்கள் வீட்டில் தினை இருக்கிறதா? அப்படியானால் அதில் சுவையான உப்புமா செய்து கொடுங்கள். இந்த தினை உப்புமா சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். செய்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும். முக்கியமாக இது ஆரோக்கியமானதும் கூட. ஒருமுறை இந்த ரெசிபி உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் சரி வாங்க இப்போது இந்த பதிவில் தினை உப்புமா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
undefined
இதையும் படிங்க: குட்டீசுக்கு பிடிச்ச சீஸ் தோசை.. மொறு மொறுனு இப்படி செஞ்சி கொடுங்க..
தினை உப்புமா செய்ய தேவையான பொருட்கள் :
தினை அரிசி - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
காய்ந்த மிளகாய் - 2
பச்சை பட்டாணி - 1/2 கப்
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
செய்முறை :
தினை உப்புமா செய்ய முதலில் ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் பச்சைப்பட்டாணியை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். அடுத்ததாக அதில் பொடியாக நறுக்கி வைத்த கேரட், குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அதுடுத்து அதில்பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், திணை அரிசி ஆகியவற்றை போட்டு நன்றாக கிளறி விடுங்கள். அடுத்து ஒரு தட்டை கொண்டு அதை மூடி வைக்கவும். நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான் ருசியான மற்றும் சத்தான தினை உப்புமா ரெடி.
இதையும் படிங்க: டயட்டில் இருக்கீங்களா? அப்ப பாசிப்பருப்பில் இப்படி அடை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்டா இருக்கும்!
தினையின் ஆரோக்கிய நன்மைகள் :
தினையில் புரதம் மாவுச்சத்து நார்ச்சத்து கொழுப்பு கனிமம் இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. தினையில் இருக்கும் குறை தான் உடலுக்கு தேவையான ஆற்றலை உடனே வழங்குகிறது. அதுமட்டுமின்றி இது வாயு, கபம் போன்றவற்றை போக்கும். இதை சாப்பிடுவதனால் எலும்பு ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதயமும் பலப்படும். முக்கியமாக டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த உப்புமா ரொம்பவே நல்லது. ஏனெனில் இது அவர்களின் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D