எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க.. குழம்பு காலியாகும்!

By Kalai Selvi  |  First Published Sep 21, 2024, 1:17 PM IST

Ennai Kathirikai Kulambu : எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு சுலபமாக செய்வது எப்படி என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.


தினமும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மதியம் சாம்பார் சாப்பிட்டு போரடித்து விட்டதா? அப்படியானால் அவர்களுக்கு பிடித்தவாறு என்ன குழம்பு செய்வது என்று தெரியாமல் நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்குக்கான பதிவுதான் இது. 

உங்கள் வீட்டில் கத்தரிக்காய் அதிகமாக இருக்கிறதா? அப்படியானால் அதில் சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்து கொடுங்கள். இந்த எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது, மிகவும் சுலபமான முறையில் செய்துவிடலாம். மேலும் ஆரோக்கியமானதும் கூட. கத்தரிக்காயில், வைட்டமின் சி, ஈ, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்ற நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

Tap to resize

Latest Videos

ஒருமுறை இந்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள்.  கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட இந்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதில் சுவை அட்டகாசமாக இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு சுலபமாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  வீட்ல காய்கறி இல்லனா காராமணி குழம்பு செய்ங்க.. ருசியா இருக்கும்!

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் :

கத்தரிக்காய் - 10
புளி - சிறிதளவு
பூண்டு - 10
சின்ன வெங்காயம் - 12
வெல்லம் - 1 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு..

நல்லெண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
அசப்போடிட்டா - 1/2 ஸ்பூன்

வறுத்து அரைக்க..

தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
எள் - 1 ஸ்பூன்
கருப்பு மிளகு - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
சீரகம் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 2 ஸ்பூன்

இதையும் படிங்க:  மட்டன் குழம்பை மிஞ்சும் சுவையில் பட்டர் பீன்ஸ் குழம்பு.. ரெசிபி இதோ!

செய்முறை :

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்ய முதலில், கத்தரிக்காய் கழுவி பிறகு அதன் நடுவில் நான்கு பகுதிகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். பிறகு அதில் கத்தரிக்காயை சில நிமிடம் வதக்கி தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் துருவிய தேங்காய், கருப்பு மிளகு, காய்ந்த மிளகாய், சீரகம், கொத்தமல்லி தூள் ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பிறகு அதை ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கவும். அவை நன்கு ஆறியதும் அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். இப்போது அதில் அசப்போடிட்டா, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக அதில் வெங்காயம் பூண்டு ஆகியவற்றை சேர்த்து சில நிமிடம் வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் புளிசாற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அதில் அரைத்து வைத்த மசாலா சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். இப்போது இதில் கத்தரிக்காயை சேர்க்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லம் சேர்த்துக் கொள்ளுங்கள். குழம்பை சுமார் 20 நிமிடம் கொதிக்க விடுங்கள். குழம்பிலிருந்து எண்ணெய் பிரிந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான் சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ரெடி. இந்த குழந்தை நீங்கள் சூடான சாதத்திற்கு ஊற்றி சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!