சர்க்கரை நோயாளிகள் தர்பூசணி பழத்தை சாப்பிடுவது நல்லதா.. கெட்டதா..என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாகவே, கோடை காலம் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது தர்பூசணி. ஆம்.. இந்த பழம் நம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வாரி வழங்குகிறது. அதுவும் கொழுத்தும் வெயிலில், தர்பூசணியை சாப்பிட்டால் உடலுக்கு குளுகுளுவென இருக்கும். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
இப்படி எல்லாரும் விரும்பி சப்பிடும் நிலையில், சர்க்கரை நோயாளிகள் தர்பூசணியை சாப்பிடலாமா.. வேண்டாமா..என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். உங்களின் இந்த சந்தேகத்திற்கான விளக்கம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.. சரி.. வாங்க இப்போது அதுகுறித்து நாம் தெரிந்துகொள்ளலாம்..
undefined
சர்க்கரை நோயாளிகள் தர்பூசணி சாப்பிடலாமா?
தர்பூசணி பழத்தில் நீர் மற்றும் நார்ச்சத்து அதிகளவு நிரம்பியுள்ளது. ஆனால், இதில் கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) சற்று அதிகமாக உள்ளது. அதாவது, 100 கிராம் தர்பூசணியில் ஜிஐ 72 உள்ளது. மேலும் இதில், கிளைசெமிக் சுமை மிகவும் குறைவாக இருக்கிறது. எனவே, 1 கப் அளவு தர்பூசணியை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.
முக்கியமாக, தர்பூசணியை சர்க்கரை நோயாளிகள் ஸ்நாக்ஸ் போல் கொஞ்சமாக தான் சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.. சாப்பாடு சாப்பிடுவது போல் அதிகமாக சாப்பிடக்கூடாது. அதுபோல, தர்பூசணியை இரவில் ஒருபோதும் சாப்பிட வேண்டாம். மேலும், சாப்பாடு சாப்பிடுவதற்கு முன்போ அல்லது பின்னோ உடனே சாப்பிட வேண்டாம். சர்க்கரை நோயாளிகள் தர்பூசணியை காலை அல்லது மாலை நேரத்தில் சாப்பிடுவது தான் நல்லது.
இதையும் படிங்க: Watermelon : சுவையான நல்ல தர்பூசணி வாங்க பெஸ்ட் டிப்ஸ் இது தாங்க!!
தர்பூசணி பழத்தின் ஊட்டச்சத்துக்கள்:
கோடைகாலத்தில் தர்பூசணியை சாப்பிட்டால், நம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து மற்றும் குளிர்ச்சி கிடைக்கும். இந்த பழத்தில், வைட்டமின் சி, ஏ, பி6 போன்ற ஊட்டச்சத்துக்களும், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், ஃபோலேட் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களும் நிரம்பி உள்ளது. குறிப்பாக இதில், ஆன்டிஆக்ஸிடண்ட்கள் அதிகமாகவே உள்ளது.
இதையும் படிங்க: வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்
தர்பூசணி பழத்தின் நன்மைகள்:
தர்பூசணி சாப்பிட்டால், உடல் எடை இழப்புக்கு நல்லது, சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது. முடியின் வலிமை அதிகரிக்கும், சருமம் மிருதுவாகும், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை குணப்படுத்தும், உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பாக்க இருக்க உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்:
ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, பிளம், பீச், ஆப்பிள், பேரிக்காய், கிவி, ஜாமூன், ஆரஞ்சு, திராட்சைப்பழம் மற்றும் பப்பாளி ஆகியவை சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. மேலும் இவற்றை சர்க்கரை நோயாளிகள் மிதமான அளவில் சாப்பிட்ட வேண்டும். அதுபோல, உயர் இரத்த சர்க்கரை உள்ளவர்களும் இவற்றை சாப்பிடலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D