Parenting Tips : கோடை வெயிலில் குழந்தைகளை பாதுகாக்க சூப்பரான டிப்ஸ் இதோ!!..!

By Kalai SelviFirst Published Apr 4, 2024, 12:56 PM IST
Highlights

கோடைக் காலத்தில் குழந்தைகள் மீது சிறப்பு கவனம் தேவை. இந்த பருவத்தில் குழந்தைகளை தாக்கும் நோய்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கோடை காலம் வந்தாலே பல பிரச்சனைகளும் கூடவே வருவது வழக்கம். இந்நிலையில், ஒரு சிறிய கவனக்குறைவு உங்களை நோய்வாய்ப்படுத்தும். சமீபத்தில், இந்திய வானிலை ஆய்வு மையம் கூட கோடைக்காலம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை கடுமையான வெப்பம் இருக்கும் என்றும், இதனால் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

தற்போது, ஏப்ரல் மாத வெப்பம் தனது அழிவைக் காட்டத் தொடங்கியுள்ளது. இதனால் ஹீட் ஸ்ட்ரோக், நீரிழப்பு, வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் போன்றவற்றால் யார் வேண்டுமானாலும் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம்.. குறிப்பாக குழந்தைகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது, எனவே, இந்த பருவத்தில் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஏதேனும் பிரச்சனை தொடர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

கோடையில் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள்:

நீரிழப்பு: கோடை காலத்தில் உடலில் தண்ணீர் பற்றாக்குறை பெரும் பிரச்சனையாக மாறும். குழந்தைகள் விளையாடுவது அல்லது மற்ற வேலைகளில் மும்முரமாக இருப்பதால் அவர்களுக்கு தண்ணீர் குடிக்க நினைவு இருக்காது. மேலும், இந்த சீசனில் அதிக வியர்வை வெளியேறுவதாலும், தேவையான அளவு தண்ணீர் குடிக்காமால் இருப்பதாலும் உடல் வறட்சியடையத் தொடங்கும். இதன் காரணமாக வாய் வறட்சி, பலவீனம், மயக்கம், அடர் மஞ்சள் நிற சிறுநீர், எரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

பாக்டீரியா தொற்று: இந்த பருவத்தில், குழந்தைகளுக்கு தொற்று நோய், குறிப்பாக பாக்டீரியா தொற்று ஏற்பட அதிக ஆபத்து உள்ளது. இதற்கு காரணம், திறந்தவெளி உணவை சாப்பிடுவது, வெளியில் தண்ணீர் அருந்துவது ஆகும். இதனால் காலரா, வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்களை உண்டாக்கும். மேலும் அவை நீண்ட காலம் நீடிக்கும். 

இதையும் படிங்க: Parenting Tips : பெற்றோர்களே.. காலையில் குழந்தைகளிடம் 'இந்த' விஷயங்களை சொல்ல மறக்காதீங்க!!

ஹீட் ஸ்ட்ரோக்: ஹீட் ஸ்ட்ரோக் மிகவும் தீவிரமானது. வலுவான சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருந்தால், ஹீட் ஸ்ட்ரோக் பிரச்சனை ஏற்படும். இதன் காரணமாக, காய்ச்சல், இதயத் துடிப்பு அதிகரிப்பு மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட வாய்ப்பு அதிகம். இந்தமாதிரி இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

இதையும் படிங்க: Parenting Tips : பெற்றோர்களே இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க.. குழந்தைகள் மோசமாக பாதிக்கப்படலாம்..

உணவு விஷம்: கோடை காலத்தில் உணவு மூலம் பரவும் நோய்கள் மிகவும் பொதுவானவை. ஏனெனில்,  கோடையில் உணவுகள் சீக்கிரம் கெட்டுவிடும். அத்தகைய சூழ்நிலையில், அந்த உணவை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் வாந்தி போன்றவை ஏற்படும். மேலும் இதனால் உடலில் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. எனவே, இந்த சூழ்நிலையில், குழந்தைகளுக்கு வெளியில் அல்லது பழைய உணவுகளை கொடுப்பது தவிர்ப்பது நல்லது.

இப்படி உங்கள் குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ளுங்கள்:

  • கோடையில், வெளியில் இருந்து வந்த உடனே குழந்தைகளுக்கு குளிர்ச்சியான எதையும் சாப்பிடுவதையோ, குடிப்பதையோ கொடுப்பதைத் தவிர்க்கவும்.
  • அதுபோல, குழந்தைகளுக்கு பழைய மற்றும் வெளி உணவுகளை வாங்கிக் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
  • குழந்தைகளை அதிக நேரம் ஏசியில் உட்கார வைக்க வேண்டாம்.
  • எலுமிச்சை ஜூஸ், தேங்காய் தண்ணீர், மோர் போன்றவற்றை குழந்தைகளுக்கு முடிந்தவரை குடிக்க கொடுங்கள்.
  • முக்கியமாக, கடுமையான சூரிய ஒளியில் குழந்தைகளை வெளியே செல்ல விடாதீர்கள்.
  • இந்த பருவத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உங்கள் சொந்த முறையில் மருந்துகளை ஒருபோதும் கொடுக்க வேண்டாம்.
  • குழந்தைகளுக்கு மூன்று முதல் நான்கு நாட்களுக்கு ஏதேனும் பிரச்சனை தொடர்ந்தால், உடனே மருத்துவரை அணுகவும்.
  • கோடைக்காலம் முடியும் வரை குழந்தைகளுக்கு பருவகால பழங்களை சாப்பிட கொடுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!