வீட்டிலேயே அவல் பர்பி எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்..
நீங்கள் கடைகளில் பர்பி வாங்கி சாப்பிட்டு இருக்கலாம். ஆனால், கண்டிப்பாக இந்த 'அவல் பர்பி' சாப்பிட்டு இருக்கவே மாட்டிங்க. இந்த பர்பி சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும் மற்றும் ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த பர்பியை நீங்கள் சிவப்பு அவல் அல்லது வெள்ளை அவலில் செய்யலாம். மேலும் இதை நீங்கள் சர்க்கரை அல்லது கருப்பட்டி வைத்து செய்யலாம். கருப்பட்டி வைத்து செய்தால் ஆரோக்கியத்திற்கு கூடுதல் நன்மை கிடைக்கும்.
மேலும் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ் வாங்கி கொடுப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே அவல் பர்பி செஞ்சி கொடுங்க. இதை நீங்கள் ஈவ்னிங் ஸ்நாக்ஸாக குழந்தைகளுக்கு கொடுத்தால், கண்டிப்பாக அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இதனால் அவர்கள் கடைகளில் ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிடமாட்டார்கள். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி.. வாங்க இப்போது இந்த 'அவல் பர்பி' எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
undefined
இதையும் படிங்க: காரமான சுவையில் ஈவ்னிங் ஸ்நாக்ஸாக ஒட்ஸ் மசாலா வடை..! சூப்பராக செய்ய இதோ ரெசிபி..!
அவல் பர்பி செய்ய தேவையான பொருட்கள்:
அவல் - 1 கப்
தேங்காய் துருவல் - 3/4 கப்
சர்க்கரை - 3/4 கப்
பால் - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 ஸ்பூன்
நெய், முந்திரி, பாதாம் - தேவையான அளவு
இதையும் படிங்க: சுவையான முட்டை மஞ்சூரியன் இனி நீங்களும் வீட்ல செய்யலாம்.. ரெசிபி இதோ!
அவல் பர்பி செய்முறை:
அவல் பர்பி செய்ய முதலில், ஒரு பாத்திரத்தில் அவல் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை தண்ணீர் விட்டு 4 முறை கழுவ வேண்டும். பின் 10 நிமிடம் அப்படியே உறை வைக்க வேண்டும். இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் நெய் விடவும். நெய் நன்கு சூடானதும், அதில் அவலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அவலில் நன்றாக வதங்கியதும், இப்போது அதில் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் கழித்து இதில் பால் சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். மணத்திற்கு அதில் கொஞ்சம் ஏலக்காய் தூளைச் சேர்த்து கொள்ளுங்கள். பால் ஓரளவு வற்றியதும் அதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிண்டவும். நல்ல கெட்டியான பதத்திற்கு வரும் சமயத்தில், அதை நெய் தடவிய பாத்திரத்தில் மாற்றி, அதை சமப்படுத்தி, அதன் மேல் பகுதியில் சின்ன சின்னத்காக வெட்டிய முந்திரி, பாதாமை தூவி விடுங்கள். சிறிது நேரம் ஆற வையுங்கள். பர்பி ஆறியதும், உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் வெட்டுங்கள். அவ்வளவு தான், இப்போது ருசியான அவல் பர்பி ரெடி!!
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D