கோடையில் சருமத்தை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகாவும்  வைக்க 'இத' மட்டும் செஞ்சா போதும்!

By Kalai Selvi  |  First Published Apr 3, 2024, 4:43 PM IST

இந்த கோடையில் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை பின்பற்றினால் மட்டும் போதும். அவை...


கோடை காலம் வந்துவிட்டாலே கூட பல சரும பிரச்சனைகளும் வந்துவிடும். எனவே, அவற்றில் இருந்து விடுபட இந்த காலத்தில் சரும பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.  அந்தவகையில், இந்த கோடையில் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை பின்பற்றினால் மட்டும் போதும். அவை...

இந்த கோடையில் சருமம்  ஆரோக்கியமாக வைத்திருக்க சிம்பிள் டிப்ஸ்:

Tap to resize

Latest Videos

undefined

CTM: CTM என்பது க்ளென்சிங், டோனிங், மாய்சரைசிங் ஆகும். இந்த கோடையில் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முதலில் இவற்றை முறையை பின்பற்றுங்கள். எப்படியெனில், முதலில் உங்கள் சருமத்திற்கு ஏற்ற க்ளென்சர் கொண்டு உங்கள் சருமத்தை சுத்தப்படுத்தி கொள்ளுங்கள். பிறகு, ஈரப்பதத்திற்கு டோனரரும், இறுதியாக மாய்சரைஸர் பயன்படுத்துங்கள்.

கற்றாழை ஜெல்: பொதுவாகவே, இது எல்லா வீடுகளிலும் இருக்கும். முடிந்தவரை கடையில் வாங்குவதைத் தவிர்க்கவும். வீட்டில் இருக்கும் கற்றாழையை முதலில் சுத்தப்படுத்தி, பின் அதிலுருந்து ஜெல்லை எடுத்து அதை முகம் மற்றும் கழுத்தில் தடவவும். இது சூரிய ஒளியால் உங்கள் சருமத்தில் ஏற்பட்ட கருமையை நீக்கும் மற்றும் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கும்.

வைட்டமின் நிறைந்த உணவுகள்: தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற வைட்டமின் சி, ஈ நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். ஏனெனில், இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை உங்கள்  சருமத்தை சரிசெய்யவும், தீங்கு விளைவிக்கும் சூரியக் கதிர்களில் இருந்து பாதுகாக்கவும் பெரிதும் உதவும்.

கிளிசரின்: இந்த கோடையில் தினமும் கிளிசரின் பயன்படுத்துவது நல்லது. கிளிசரின் கொண்டு சருமத்தை சுத்தப்படுத்தினால், சேதமடைந்த சரும செல்களை சரிசெய்வது மட்டுமின்றி, உங்கள் முகத்தை நாள் முழுவதும் முகத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.

தேங்காய் எண்ணெய்: கோடையில் தேங்காய் எண்ணெயை கண்டிப்பாக பயன்படுத்துங்கள். ஏனெனில், இது உங்கள் சருமத்தை பொலிவாக வைத்திருக்கும். எனவே, நீங்கள் குளிக்கும் முன் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி சருமத்தை நன்கு மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்குமாம்.

ஆவி பிடிப்பது: பொதுவாகவே கோடையில், சருமத்தில் அதிக அழுக்கு மற்றும் எண்ணெய் படிந்திருப்பதால், சரும பிரச்சனைகள் ஏற்படும். எனவே, இவற்றை தவிர்க்க ஆவி பிடிப்பதே சிறந்த தீர்வாகும். வாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக ஆவி பிடிக்க வேண்டும்.

சன்ஸ்கிரீன் பயன்பாடு: இந்த கோடையில் நீங்கள் வீட்டை விட்டு வெளியேறும் முன் கண்டிப்பாக சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். இதனால், தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிலிருந்து உங்கள் சருமம் பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி, சருமம் வறட்சியையும் தடுக்கும்.

ஃபேஸ் பேக்: கோடையில் ஃபேஸ் பேக் பயன்படுத்தினால் சருமம் பொலிவாகவே இருக்கும். உதாரணமாக, பயத்த மாவு, தயிர், மஞ்சள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

ஷேவிங்: உங்கள் சருமத்தை எப்போதும் ஷேவிங் செய்யுங்கள். நீங்கள் செய்யவில்லை என்றால், சரும வறட்சி, வெடிப்புகள் மற்றும் பிற பிரச்சனைகள் ஏற்படும். மேலும் நீங்கள் ஷேவ் செய்த பிறகு சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ளுங்கள்.

click me!