Sex fear: செக்ஸில் இதுதான் முதல் தடவையா...? உண்டாகும் குழப்பங்களும், அதற்கான தீர்வுகளும்..!!

By Anu KanFirst Published Jan 28, 2022, 2:12 PM IST
Highlights

உடலுறவு என்பது ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் இயல்பான ஒன்றுதான். இதை நினைத்து நீங்கள் அதிக பயம் கொள்ள தேவை இல்லை. இதில், நல்லதா? கெட்டதா? என்ற விவாதமே கிடையாது.
 

பிறப்பும் , இறப்பும் அவரவர் கையில் இல்லை என்றாலும், நாம் வாழும் வாழ்க்கை முறை நம்முடைய கையிலே உள்ளது. உடலுறவு என்பது ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் இயல்பான ஒன்றுதான். இதை நினைத்து நீங்கள் அதிக பயம் கொள்ள தேவை இல்லை. இதில், நல்லதா? கெட்டதா? என்ற விவாதமே கிடையாது.

உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள புத்தகம் படித்தல், உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமாக உணவுகளை சாப்பிடுவது என்பது நாம் அனைவரும் அறிந்த பொதுவான விஷயங்களாகும். இந்த பட்டியலை தவிர்த்து நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள அடிக்கடி உடலுறவு கொள்வதையும் ஆராச்சியாளர்கள் இணைத்துள்ளனர். அடிக்கடி உடலுறவு வைத்து கொள்ளும் போது மனஅழுத்தம் குறைகிறது, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. அதுமட்டுமின்றி, முதுமையில் நோய் வருவதை தடுக்கிறது, நீண்ட ஆயுளைக் தருகிறது. மேலும், இதயத்தை  வலுப்படுத்தும்.

எனவே, உடலுறவிற்கு நீங்கள் தயார் படுத்துவதற்கு, பயம் தேவையில்லை. சினிமா காட்சிகளை பார்த்து அதிக கற்பனை வேண்டாம். 

உடலுறவுக்கு தயாராகாத பலரும் அதைப்பற்றி தெரிந்துகொள்ள ஆபாசப் படங்களைபார்க்கின்றனர். அதை பார்த்து, துணையிடம் சினிமா படங்களில் காண்பிப்பது போன்று, அதிகமாக எதிர்பார்க்காதீர்கள்.  அதில் காட்டும் ஆபாச காட்சிகள்  50 சதவீதம் நிஜ உறவு இருக்காது. உடலுறவு உண்மையில் நடக்கும். 

அதேபோன்று, நம்முடைய முன்னோர்கள்கன்னித்தன்மையை கண்டறிய கன்னித்திரை கிழிந்து இரத்தம் உதிர்வதை அறிகுறியாக பார்ப்பார்கள். ஆனால் இன்றைய நவீன காலத்து பெண்களுக்கு அதும் மிகவும் சிக்கலான ஒன்றாகும். ஏனெனில், தற்போது மேற்கொள்ளப்படும் சில கடிமான உடற்பயிற்சி சீக்கிரமே கன்னித்திரை கிழிந்துவிடும். எனவே பல பெண்களுக்கு முதல் புணர்ச்சியின் போது இரத்தம் வருவது நிகழாது. 

அதேபோல் முதல் முறை சற்று வலி இருக்கும். அசௌகரியமாக உணர்வீர்கள். அந்த சமயத்தில் வலி தெரியாமல் இருக்க முத்தமிடுதல், தொடுதல் போன்று செய்தால் வலி தெரியாது.

ஆரம்பத்தில் சில நிமிடங்களுக்கு மட்டுமே அந்த வலி இருக்கும். ஆனால் அது சீக்கிரமே உங்களுக்கே தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக வலி குறைந்துவிடும். புணர்ச்சிக்கு முன் ஃபோர்பிளே மிகவும் அவசியம். இது உங்கள் உடலுறவை திருப்தியாக்கும். அதோடு வெஜினா சற்று இலகுவாகும்.

பாதுகாப்பு அவசியம்:

கருத்தடை விஷயங்களை முறையாக பின்பற்றுங்கள். ஆணுறை பயன்படுத்துவது தேவையற்ற கரு வளர்ச்சியை தடை செய்வது மட்டுமன்றி , பாலியல் தொற்றுகளையும் தவிர்க்க உதவும். அதேபோல் முதல் உடலுறவு மேற்கொள்பவர்கள் பாதுகாப்பு கருதி ஒரே சமயத்தில் இரண்டு ஆணுறைகளை அணிகின்றனர். அது முற்றிலும் தவறான விஷயம். ஒன்றே போதுமான பாதுகாப்பை கொண்டிருக்கும். இரண்டு அணிவது ஒன்றோடு ஒன்று உரசி கிழிந்துவிடும்.  

 தேவையற்ற கற்பனைகளை விட்டுவிடுங்கள்:

உங்களால் நீண்ட நேரம் செயல்பட முடியாது. முதல் முறை என்பதால் வியர்வை சொட்ட சொட்ட உங்களால் செய்ய இயலாது. அதேபோல், எதையும் உங்களால் அந்த சமயத்தில் நிரூபிக்க முடியாது. இது போன்ற எண்ணங்கள் உங்களுக்குள் தேவையற்ற அழுத்ததை உண்டாக்கும். இதனால் உங்கள் பாலியல் வாழ்கை பாதிப்படையும்.

உங்களுக்கு ஏதேனும் அசௌகரியமாக உணர்ந்தால், தவறாகத் தெரிந்தால் உடனே சொல்லிவிடுங்கள். பயம் வேண்டாம். ஒருவேளை உங்களுக்கு இன்னும் நேரம் , நாட்கள் தேவைப்படலாம், என்பதை மனதில் கொள்ளுங்கள்.
 

click me!