
இன்றைய இளைய தலைமுறையினர், திருமணமாகி ஓரிரு ஆண்டுகளுக்கு குழந்தை பற்றிப் பெரும்பாலான தம்பதியினர் சிந்திப்பதே இல்லை. அதன் பிறகு நீண்ட நாட்கள் கழித்து குழந்தை பெற்றுக்கொள்ள முயலும்போது, முறையில்லாத உணவு பழக்கங்களால் சிக்கல் ஏற்படுகிறது.
குழந்தையின்மை பிரச்சனை..?
இதன் காரணமாக, கருவுறுதல் இயற்கை முறையில் நிகழாததால், செயற்கை கருத்தரிப்பு முறையினை நோக்கி பெரும்பாலான தம்பதியினர் செல்கின்றனர். வளரும் நாடுகளில் நான்கு தம்பதிகளில் ஒருவர் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் கூறுகிறது. எனவே, திருமணத்திற்கு பிறகு சரியான முறையில் குழந்தை பெற்று கொள்வது அவசியமான ஒன்றாகும்.
அப்பாவாக சரியான வயது எந்த வயது தெரியுமா..?
எனவே, சமீபத்திய உயிரியல் ஆய்வின் படி, ஆண்கள் 20 வயதிற்கு பிறகும், 30 வயதின் துவக்கமும் தந்தையாக சரியான வயதாகும். 40 வயதிற்கு மேல் குழந்தை பெற்று கொள்ளும் ஆண்களின் பிள்ளைகள் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் நோயால் பாதிக்கப்படும் அபாயம் 5 மடங்கு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், வயதான ஆண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் நரம்பியல் நோயால் பாதிக்கப்படவும், வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு சரியான வயதில் அப்பவாவது அவசியமான ஒன்றாகும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.