Sleep problems: ஆபிஸில் அடிக்கடி தூக்கம் வருதா..? நாள் முழுவதும் குதூகலமாக வைத்திருக்க சூப்பர் 5 டிப்ஸ்...

By Anu KanFirst Published Jun 13, 2022, 3:18 PM IST
Highlights

Sleep problems: நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்யும் போது, தூக்கம் வரும். இவற்றை தவிர்க்க பயனுள்ள 5 சூப்பர் யோசனைகளை படித்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய நவீன வாழ்க்கை முறையில், உடலுழைப்பு பற்றியே அறியாத வண்ணம் இங்கு பலரின் வாழ்கை முறை கழிகிறது. அவற்றில் முக்கியப் பங்கு வகிப்பது தொழில்நுட்பம், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி நம்மில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் அபரிமிதமானது. நிறுவனங்களில் வேலை செய்வதில் தொடங்கி, வீட்டில் ஓய்வு எடுப்பது வரை எல்லாவற்றிக்கும் தொழில்நுட்பம் இன்றியமையாதது.

ஆபிஸில் அடிக்கடி தூக்கம் வருதா..? 

அவற்றில் நாம் உட்காரும் முறையும் நாற்காலியும் கூட நமக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஒரே இடத்தில நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது இயல்பாகவே உடலுக்கு சோர்வை உண்டாக்கும். கழுத்து வலி, தோல்பட்டை வலி, இடுப்பு வலி, முதுகு வலி என நாள்பட்ட உடல் உபாதைகள் போன்றவற்றை ஏற்படுத்தும். 

நீண்ட நேரம் நாற்காலியில் அமரும்போது?

இவை மட்டுமின்றி, நீண்ட நேரம் நாற்காலியில் அமரும்போது, ரத்த ஓட்டம் தேங்கி மூளைக்கும், இதயத்துக்கும் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். இதனால், கால், மூளை, இதயம் போன்ற பகுதிகளில் உள்ள ரத்தக்குழாய்களில் கட்டிகள் உண்டாக வாய்ப்பு உண்டு. நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்யும் போது, தூக்கம் வரும். 

1. எனவே, பணிகளுக்கு இடையில் அவ்வப்போது எழுந்து 10 நிமிடம் நடந்து விட்டு வரலாம். 

2. குறிப்பாக, மதிய உணவை அளவாக எடுத்து கொள்வது, தூக்கத்தை தவிர்க்க உதவும். 

3.  நீரைக் கொண்டு நீங்கள் முகம் கழுவினால் உங்கள் முகங்களில் உள்ள நரம்புகள், தசைகள் புத்துணர்ச்சியடையும் அதனால் சோர்விலிருந்து மீள்வீர்கள்.

4. கணினியில் பணி புரிவோர் ஹெட்போனில் சுறுசுறுப்பாக இசையை கேட்டு கொண்டு வேலை செய்யலாம். 

5. இனிப்பு பொருட்கள் சர்க்கரை அதிகம் சேர்த்துக் கொள்ளாதீர்கள். சிலர் தூக்கம் வருவதை தவிர்க்க ஸ்வீட் சாக்லெட்டுகளை எடுத்துச் சாப்பிடுவார்கள். இது தவறான பழக்கம்.

 6. ஆனால், தூக்கம் வரும் வேலையில், டீ அல்லது காபி எடுத்து கொள்வது சுறுசுறுப்பை தரும்.

மேலும் படிக்க....Type 2 Diabetes: டைப் 2 நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன..? டெஸ்ட் யாருக்கு அவசியம்...


 

click me!