
இன்றைய நவீன வாழ்க்கை முறையில், உடல் எடையினை குறைப்பது என்பது இந்த தலைமுறையினருக்கு மிகுந்த சவாலாக உள்ளது. உடல் எடை குறையாமல் இருக்க நமது உணவுப் பழக்கமும் ஒரு முக்கியக் காரணமாகும். எனவே, நமது உணவுப் பழக்கங்களில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம், உடல் எடையைக் குறைப்பது மட்டுமின்றி ஆரோக்கியமாகவும் வாழலாம். அதற்காக, உடல் எடையைக் குறைக்க உணவைத் தவிர்க்க வேண்டும் என்பதல்ல, சில ஆரோக்கியமான உணவு முறைகளைப் பின்பற்றி உடல் எடையினை விரைவாகக் குறைக்கலாம்.
உடலை ஒல்லியாகக் காட்ட உடற்பயிற்சி செய்வது, பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிடுவது போன்றவை நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவற்றைத் தவிர்த்து உடல் எடையினை சுலபமாகக் குறைக்க ஆரோக்கியமான 2 எளிய வழிகள் உள்ளன. இவற்றைப் பின்பற்றினால் நமது உடல் எடை இரட்டிப்பாகக் குறையும் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
முட்டையுடன் கீரை:
முட்டையுடன், இரும்புச்சத்து அதிகமுள்ள கீரையைச் சேர்த்துச் சாப்பிடுவது தேவையற்ற கரிகளைக் குறைப்பதுடன் அதிக அளவு ஊட்டச்சத்துக்களையும் நமக்கு வழங்கும். மேலும், கீரைகளைச் சாப்பிடுவது நீண்ட நேரம் பசியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. தசை வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் வலிமையை அதிகரிக்கிறது.
ஆப்பிள் மற்றும் வேர்க்கடலை:
ஆப்பிள்கள் மற்றும் வேர்க்கடலை உடல் எடையினை குறைக்க உதவுகிறது. மேலும், இதய நோய், சர்க்கரை நோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகவும் அமைகின்றது. இவை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துச் சாப்பிடும் போது, உடல் எடையினை வெகுவாகக் குறைக்கிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.