Summer drink: வெயில் ரொம்ப ஓவரா இருக்கா..? உடல் சூட்டை தணிக்கும் சம்மருக்கு கூலான ஜில் ஜில் பானங்கள்...

By Anu KanFirst Published Jun 12, 2022, 2:06 PM IST
Highlights

Summer drink: கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் 'ஜில்லுன்னு எதையாவது குடிச்சா நல்லா இருக்கும்’ என்ற அடிக்கடி தோன்றும். அதன்படி, கோடைக்கு ஏற்ற சூப்பர் பானங்கள் என்ன என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

கோடை காலம் ஆரம்பித்து விட்டாலே, சூரியன் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விடும். அதிலும், இந்த வருடம் ஆரம்பத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே காணப்படுகிறது.  கோடையில், உடலில் பல்வேறு உடல் உபாதைகளை எதிர் கொள்வீர்கள். எனவே, மண்டைய பிளக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, ‘ஜில்லுன்னு எதையாவது குடிச்சா நல்லா இருக்கும்’ என்ற அடிக்கடி தோன்றும்.  எனவே இதுவரை அடிக்கடி குடித்து வந்த டீ, காபியை கைவிட்டு உடல் சூட்டை தணிக்கும் குளிர்ச்சியான  பானங்கள் குடிக்க தயாராவோம். 

கோடை காலம் பானங்கள்:

அந்த வகையில், நன்மை குளு குளு வென வைத்திருக்க இயற்கை பானங்களில் மோருக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அந்த வகையில்,  தயிரில் இருந்து பெறப்படும் மோர் நமது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய ஒரு குளிர் பானமானாக உள்ளது. இதனை தவிர்த்து,  மேலும், கற்றாழையுடன் மோர், உப்பு சேர்த்து குடிப்பது குளிர்ச்சியை தரும். 

1. வெயில் காலத்தில் கிடைக்கும் பானங்களை சர்க்கரை, ஐஸ் சேர்க்காமல் சாறாக்கி பருகலாம். 

2. சீரகம், வெந்தயம், சோம்பு, ஆகியவற்றை தனித்தனியாக நீரில் ஊற வைத்து பருகலாம். 

3. மண்பாண்டங்களில் நீரை சேமித்து வைத்து பருகுவது உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தரும். 

4. இளநீர், எலுமிச்சை சாறு, ஆரஞ்சு, சாத்துக்குடி ஜூஸ், கரும்பு சாறு, வாட்டர் மெலன் போன்ற இயற்கை பானங்கள் அடிக்கடி பருகலாம்.

மேலும் படிக்க....Summer Tips: கோடையில் அதிகம் மசாலா சேர்க்கிறீர்களா..? அப்படினா..? இந்த பதிவு உங்களுக்குத்தான்...!

 

click me!