
தூங்கும் போது மூக்கு மற்றும் தொண்டை வழியாக மாறி மாறி சுவாசிப்பதால் குறட்டை சப்தம் ஏற்படுகிறது. ஒருவர் விடும் குறட்டை, அருகில் உள்ளவர்களின் தூக்கத்தைக் கெடுத்து விடுகிறது. நம்மில் பெரும்பாலானோர் அதனை அலட்சியமாக கருதுகின்றோம். ஆனால், குறட்டை பல்வேறு ஆபத்துகளை உண்டு பண்ணும்.
குறட்டை வருவதற்கான காரணங்கள்:
பொதுவாக பருமனாக உள்ளவர்களுக்கு குறட்டை வருவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே உடல் எடையை குறைப்பது அவசியமாகும். நேராக படுப்பதால் குறட்டை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பக்கவாட்டில் படுக்கவும். அதேபோன்று, பிறவிக்குறைபாடு மற்றும் வயதாவதன் காரணமாக குறட்டை தொல்லை அதிகமாக வரும்.
குறட்டையால் வரும் நோய்கள் :
இரவில் உறக்கத்தில் குறட்டை விடுபவர்கள், பகலில் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதிக சோர்வு, அன்றாட வேலைகளில் அக்கறை செலுத்த முடியாமல், மனா உளைச்சல்களுடனே வாழ்கின்றனர். இத்தகைய குறட்டை, இதயத்திற்கு பாதிப்பை தந்து இதய நோய்களைக் கொடுத்துவிடும்.
குறட்டை பிரச்சனையை தவிர்ப்பதற்கான வழிமுறைகள்:
1. தினமும் இரவில் படுக்கும் முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில், 1/2 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன், தேன் கலந்து சாப்பிட்டால் குறட்டை பிரச்சனை தீரும்.
2. இஞ்சி தேநீர் அருந்தினால் அது தொண்டைக்கு இதமளித்து, குறட்டை வருவதைக் குறைக்கும்.
3. இரவு உறங்கச் செல்வதற்கு முன்னதாக 1/2 பூண்டு பற்களை சாப்பிட்டு, அதன் பிறகு ஒரு டம்ளர் வெந்நீர் அருந்தி வந்தால் குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
4. தூங்குவதற்கு 30 நிமிடம் முன், 1/2 டீஸ்புன் ஏலக்காய் பொடியை ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் குறட்டை பிரச்சனை தீரும்.
5. மெலடோனின் அதிகம் உள்ள வாழைப்பழம், அன்னாசிப் பழம், ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும், இது குறட்டையை தவிர்க்கும். மது அருந்துவதால் தொண்டை தசைகள் தளர்ந்து குறட்டை ஏற்பட காரணமாகிறது. எனவே மதுவை தவிர்க்கவும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.