Yawning Reason: நம் உடலில் ஏற்படும் இயற்கை நிகழ்வுகளில் ஒன்று தான் கொட்டாவி ஆகும். பொதுவாக கொட்டாவி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது.
நம் உடலில் ஏற்படும் இயற்கை நிகழ்வுகளில் ஒன்று தான் கொட்டாவி ஆகும். பொதுவாக கொட்டாவி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. குறிப்பாக, அளவுக்கு அதிகமாக சோர்வை உணர்ந்தாலோ அல்லது தூக்கம் வரும் வேளையிலோ தான் வரும். மேலும் இந்த கொட்டாவியானது நன்கு தூங்கி எழுந்தால் நின்றுவிடும். இதனை தவிர்த்து கொட்டாவி வருவதற்கான பல்வேறு காரணங்கள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
1. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது களைப்பை அதிகப்படுத்தலாம். எனவே, சிறிது தூரம் எழுந்து நடங்கள். அதேபோன்று, சூரிய ஒளி உள்ள இடத்தில் அமர்ந்து வேலை செய்யுங்கள். இது உங்களுக்கு புது ஆற்றலை கொடுக்கும்.
2. அடிக்கடி கொட்டாவி வரும் நேரங்களில், நகைச்சுவை வீடியோக்கள்,ஜோக்குகள் போன்றவற்றை பார்க்கலாம். ஏனெனில், சிரிப்பிற்கு கொட்டாவியை தடுக்கும் பண்பு இருக்கிறது.
3. மதிய உணவை அளவோடு சாப்பிடுங்கள். வேலையில் சோர்வாக இருக்கும் போது, உற்சாக மூட்டும் இசையை கேளுங்கள். ஆக்ஸிஜன் உடலில் குறைவாக இருந்தாலும் கொட்டாவி வரும். எனவே இதனை நிறுத்த, அவ்வப்போது மூச்சை நன்கு உள்ளிழுத்து வெளி விடுங்கள்.
4. அடிக்கடி கொட்டாவி வராமல் தடுக்க...காபி, டீ, தயிர் போன்றவற்றை அருந்தினால், உடல் சூட்டை தணித்து கொட்டாவி வருவதை தடுக்கும்.
5. மேற்சொன்ன காரணங்களை தவிர்த்து, உடலுக்கு வேண்டிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் இருந்தால், அந்நேரம் கொட்டாவி வரும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.