
இன்றைய நவீன பழக்கவழக்கம், நம்முடைய வாழ்கை முறையில் பல மாறுதல்களை கொண்டு வந்துள்ளது. அவற்றில் உடல் எடை அதிகரிப்பு என்பது நம்மில் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
உடல் எடை பிரச்சனை:
உடல் எடை அதிகரிப்பு பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள். உடல் எடையை குறைப்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிக பெரிய சவாலாக இருக்கிறது. நாம் பெரும்பாலும், உடல் எடையை குறைப்பதற்கு, உடற்பயிற்சி, கலோரி குறைவான உணவுகளை உட்கொள்வது, பசியை கட்டுப்படுத்துதல், சரியான அளவு தண்ணீரைக் குடிப்பது போன்ற வழிகளை பின்பற்றி வந்தோம்.
ஆனால், இன்றைய பிஸியான வாழ்கை முறையில், நம்மில் பெரும்பாலோனோர் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதை ஒரு சில மாதங்களுக்கு பிறகு கைவிட்டு வருகிறோம். அவர்கள், இவற்றைய தவிர்த்து உடல் எடையை குறைக்க வாழ்கை முறையில் சிறு மாறுதல்களை கொண்டு வருவது அவசியமான ஒன்றாகும்.
நலமுடன் வாழ இந்த பத்து கட்டளைகள் பின்பற்றுதல் அவசியம்...
1. உடற்பயிற்சி உடலுக்கு அவசியம். இவை உங்கள் உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமானவும் வைத்திருக்க உதவும்.
2. இரண்டு மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து கணினியில் வேலை செய்ய வேண்டாம்.
3. மூன்று வேளை உணவு உட்கொள்ளவும்.
4. நான்கு மணி நேரத்திற்கு மேல் ஓர் இடத்தில் அமர வேண்டாம்.
5. ஐந்து மணி நேரத்திற்கு ஒரு முறை சிறுநீர் கழிக்கவும்.
6. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உடல் எடையை சரிபார்த்து, உணவுகளில் மாறுதல் கொண்டு வருவது அவசியம்.
7. ஏழு மணி நேரம் தூக்கம் அவசியம்.
8. எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
9. ஒன்பது மணி நேரத்திற்கு மேல் பயணம் செய்ய வேண்டாம்.
10. பத்து மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை அவசியம்.
அன்றாட வாழ்வில், மேற்சொன்ன இந்த பத்து கட்டளைகளை பின்பற்றுவதன் மூலம் உடல் ஆரோக்கியம், மட்டுமின்றி மன ஆரோக்கியத்துடனும் வாழலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.