Exercise: பெண்களே உங்கள் உடல் அழகை மேம்படுத்த வேண்டுமா.? அப்படினா! இந்த சிம்பிள் வழிமுறைகள் பாலோ பண்ணுங்கோ

Anija Kannan   | Asianet News
Published : Jun 06, 2022, 01:53 PM IST
Exercise: பெண்களே உங்கள் உடல் அழகை மேம்படுத்த வேண்டுமா.? அப்படினா! இந்த சிம்பிள் வழிமுறைகள் பாலோ பண்ணுங்கோ

சுருக்கம்

Beauty Tips: பெண்கள் மேக்கப் போடாமல் தங்கள் அழகை மேம்படுத்த, வாரம் 3 மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். 

இன்றைய நவீன கால கட்டத்தில், அழகை விரும்பாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். மேலும் அழகை மேம்படுத்த  பல்வேறு முயற்சி எடுப்பார்கள். அதிலும் அந்த அழகை மேம்படுத்த நிறைய பணத்தை செலவழித்து அழகு நிலையங்களுக்குச் செல்வார்கள், நம்முடைய அழகை இயற்கையான  வழிமுறைகள் மூலமாகவே மேம்படுத்தலாம். அவை என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

உடற்பயிற்சி அவசியம்:

எனவே, பெண்கள் மேக்கப் போடாமல் தங்கள் அழகை மேம்படுத்த, வாரம் 3 மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், நச்சுக்களை அகற்றும். சருமத்திற்கு வழங்கப்படும் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். ஓட்டப்பயிற்சி, யோகா, நீச்சல், செய்வது சருமத்திற்கு நன்மை செய்வதோடு, மனநிலையை மேம்படுத்தும். நன்றாக உறங்குவதன் மூலம் கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் மறையும்.

உணவுப் பழக்கவழக்கங்கள் அவசியம்:

அதேபோன்று, உணவுப் பழக்கவழக்கங்கள் மிகவும் அவசியமான ஒன்றாகும்.   நீங்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உண்ணவில்லை என்றால்,  அவை உடலில் பல பிரச்சனைகளை உண்டுபண்ணும்.  பலர் பிஸியாக இருப்பதால் காலை உணவையும் சாப்பிடுவதில்லை, அத்தகைய சூழ்நிலையில்  ஊட்டசத்து நிறைந்த உணவுகள் இல்லை என்றால், உடல் ஆரோக்கியம் கேட்டு விடும்.  அதோடு நீங்கள் உடல் அழகை இழக்க நேரிடும். எனவே  உடல் அழகை மேம்படுத்த ஆரோக்கியமான உணவு முறைகள் மிகவும் அவசியமான ஒன்றாகும். 

 மேலும் படிக்க....Diabetes control Food: சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க....ஆயுர்வேத மருத்துவத்தின் 5 முக்கிய உணவு குறிப்புகள்

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்கள்