
இந்த கால கட்டத்தில் பிள்ளைகளின் மனம், மூளை, உடல் என அனைத்து வகையிலும் மாற்றங்கள் ஏற்படும் என்பதனால் மாறி மாறி உணர்ச்சிகள் தோன்றும். குறிப்பாக, பிள்ளைகள் வளரும் பருவங்களில் டீன் ஏஜ் பருவம் பல்வேறு மாற்றங்களைக் கொண்டிருக்கும் கடினமான பருவமாகும். குழந்தையாகவும் அல்லாமல் வாலிபராகவும் அல்லாமல், இடைப்பட்ட ஒரு நிலையில், பதின்பருவ காலத்தில் ஒவ்வொரு பிள்ளையும் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்ளும். எனவே, 13- 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் எதைப் பற்றியெல்லாம் எப்படியெல்லாம் பேசலாம் என்பதை பெற்றோர்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
தொடர்ச்சியான உரையாடல்:
பிள்ளைகள் வீட்டிலிருக்கும் நேரங்களில் அவர்கள் உங்களுடன் நேரத்தை செலவிடும் வகையில் இருவருக்கும் பிடித்தமான பொழுதுபோக்கை தேர்ந்தெடுங்கள். இருவரும் புத்தகங்களைப் படித்து விவாதிக்கலாம். யோகா, நீச்சல், இசை, நடனம் போன்ற வகுப்புகளுக்கு சேர்ந்து செல்லலாம்.
அட்வைஸ் பண்ணுவதை விட ஜாலியாக பேசுங்கள்:
உங்கள் குழந்தையை திட்டுவது அல்லது அவர்கள் செய்தது தவறு மிக நீண்ட நேரம் அட்வைஸ் பண்ணுவது ஆகியவற்றை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் தவறு செய்தாலும் அல்லது நீங்கள் விரும்பாத எதைச் இருந்தாலும் அவர்களுக்கு அதைப் புரிய வைக்க, ஜாலியான முறையில் எடுத்துச் சொல்ல வேண்டும்.
சமூகத்தோடு பழகும் வாய்ப்பு:
ழந்தைகளைச் சமூகத்தின் சிறந்த மனிதனாக உருவாக்குவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. குழந்தைகளுக்கும் சமூகத்துக்கும் நிறைய தொடர்பு உள்ளது என்பதை உணர்த்துவதற்கான வாய்ப்பை வழங்குங்கள்.
பிள்ளைகளுக்கு ப்ரைவஸி கொடுங்கள்:
குடும்பம், படிப்பு, என்று மாணவர்கள் நேரம் செலுத்துவது முக்கியமாக இருந்தாலும் குழந்தைகள் தனக்கெனறு,தான் விரும்பும் செயலை செய்வதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும். அவர்களை நண்பர்களுடன் விளையாட அனுமதிக்க வேண்டும். எப்பொழுதுமே பெற்றோராகிய நீங்கள் அவர்களை கவனித்துக் கொண்டே, கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்க கூடாது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.