Type 2 Diabetes: டைப் 2 நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன..? டெஸ்ட் யாருக்கு அவசியம்...

By Anu KanFirst Published Jun 13, 2022, 2:01 PM IST
Highlights

Type 2 Diabetes early symptoms: நீரிழிவு என்பது உடலின் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யவோ அல்லது பயன்படுத்தவோ இயலாமையால் வகைப்படுத்தப்படும் ஒரு நாள்பட்ட நிலை ஆகும். இதன் ஆரம்ப அறிகுறிகள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளவும்.

இன்றைய நவீன கால கட்டத்தில், நீரிழிவு நோய் என்பது 40 வயதை கடந்த நம் அனைவருக்கும் வரும் பொதுவான நோயாக மாறியுள்ளது. நீரிழிவு என்பது உடலின் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யவோ அல்லது பயன்படுத்தவோ இயலாமையால் வகைப்படுத்தப்படும் ஒரு நாள்பட்ட நிலை. இது பல காரணிகளால் இருக்கலாம்.  

குறிப்பாக, டைப்-2 நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணம் சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை, உணவு பழக்கம் என கூறப்படுகிறது. இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 25 வயதிற்குட்பட்ட 4 பேரில் ஒருவருக்கு இந்த டைப்-2 நீரிழிவு நோய் உள்ளது எனவும் கூறப்படுகிறது. உண்மையில், டைப்-2 நீரிழிவு நோய் இப்போது தொற்றுநோய் (epidemic) வரையரைக்குள் வரும் அபாயத்தில் உள்ளது.

நீரிழிவு நோய் பரவுவது பாலின சார்புடையது அல்ல என்று பெரும்பாலும் கூறப்படுகிறது. இருப்பினும், பல ஆய்வுகள் பெண்களுடன் ஆண்களை ஒப்பிடும்போது நீரிழிவு நோய், சர்க்கரை நோய் ஆண்களுக்கே அதிகம் என்று கூறுகின்றன.

நீரிழிவு நோயின் ஆரம்பகால அறிகுறிகள்:

நீரிழிவு நோய் பரவுவது பாலின சார்புடையது அல்ல என்று பெரும்பாலும் கூறப்படுகிறது. இருப்பினும், பல ஆய்வுகள் பெண்களுடன் ஆண்களை ஒப்பிடும்போது நீரிழிவு நோய்/சர்க்கரை நோய் ஆண்களுக்கே அதிகம் என்று கூறுகின்றன.

கண் பார்வை:

கண் பார்வை கூர்மையானவர்களுக்கு பார்வை திறன் மங்கலாக இருக்கும். பார்வையில் ஏற்கனவே குறைபாடு இருப்பவர்களுக்கு இவை மேலும் மங்கலான பார்வைகுறைபாட்டை உண்டாக்கும். இவை முதற்கட்ட ஆரம்ப அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதிகப்படியான சோர்வு: 

நீரிழிவு நோயாளிகளுக்கு அடிக்கடி சோர்வு ஏற்படும். இது பல்வேறு வகையான ஊட்டச்சத்து, வாழ்க்கை முறை, நாளமில்லா மற்றும் உளவியல் காரணிகளால் ஏற்படலாம். சரியாக ஓய்வெடுத்து ஆரோக்கியமாக சாப்பிட்டாலும் ஒருசிலருக்கு சோர்வு ஏற்படும், அது நீரிழிவு நோயின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.

திடீர் உடல் எடை இழப்பு: 

உங்கள் உடலில் இரத்த குளுக்கோஸை சரியாக செயலாக்க முடியாதபோது, திடீர் எடை இழப்பு ஏற்படும். எந்தவொரு உணவு முறை, உடற்பயிற்சி  இல்லாமல் எடை இழப்பு ஏற்படுகிறதோ, அது பொதுவாக நீரிழிவு நோயின் அறிகுறியாக அடையாளம் காணப்படுகிறது. இது குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோய்க்கான சிக்கல்களுக்கான ஆபத்து காரணியாகவும் இருக்கலாம்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்: 

நாள் ஒன்றுக்கு 3முதல் 4 வரை சிறுநீர் கழிப்பது. இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது அவை இரத்த ஓட்டத்தில் திரவங்களின் அளவை அதிகரித்து சிறுநீரகத்துக்கு அதிக அழுத்தம் கொடுக்கும்.  சிலருக்கு சிறுநீர் தொற்றும் உண்டாக கூடும்.

 மேலும் படிக்க....Summer drink: வெயில் ரொம்ப ஓவரா இருக்கா..? உடல் சூட்டை தணிக்கும் சம்மருக்கு கூலான ஜில் ஜில் பானங்கள்...

click me!