அம்பானி குடும்ப விநாயகர் சதுர்த்தி விழாவில் ராதிகா மெர்ச்சண்ட் வயிற்றில் கை வைத்துக் கொண்டே நடப்பதால் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தங்கள் ஆடம்பர வாழ்க்கை முறை உள்ளிட்ட பல விஷயங்களுக்காக அம்பானி குடும்பத்தினர் அவ்வபோது தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து வருகின்றனர். இந்த ஆண்டில் அம்பானி வீட்டில் பல நிகழ்வுகள் நடந்தன. முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்டின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள், பிரம்மாண்டமான திருமணம் என பல விழாக்கள் உற்சாகமாக கொண்டாடப்பட்டன.
அந்த வகையில் அம்பானி குடும்பத்தினர் இந்த ஆண்டு அம்பானி குடும்பத்தினர் பிரமாண்டமாக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். ஆனந்த் அம்பானியுடன் திருமணத்திற்குப் பிறகு ராதிகா மெர்ச்சன்ட்டின் முதல் விநாயகர் சதுர்த்தி விழா என்பதால் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.
undefined
தினமும் இட்லி சாம்பார்! அனுஷ்கா ஷர்மா ஃபாலோ பண்ணும் மோனோ டயட்டில் இவ்வளவு நன்மைகளா?
விநாயக சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு பல பிரபலங்களின் வருகையால் அம்பானிகளின் வீடான ஆண்டிலியா பரபரப்பாக இருந்தது. சல்மான் கான் முதல் ஷ்ரத்தா கபூர் வரை, பல பிரபல பாலிவுட் பிரமுகர்கள் இதில் பங்கேற்றனர். இந்த விநாயக சதுர்த்தி விழா கொண்டாட்டத்தின் போது நீதா அம்பானி தனது மருமகள் ராதிகா மெர்ச்சண்டை முதன்முறையாக ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்திய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரேவும் உள்ளார். மூவரும் ஒன்றாக கேமராக்களுக்கு போஸ் கொடுக்கின்றனர்.
இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது. ராதிகா வயிற்றில் கை வைத்துக் கொண்டே நடந்து செல்வதையும், ஹீல்ஸ்க்கு பதில் ஃபிளாட் காலணிகளையும் அணிந்திருப்பதால் பலரும் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என்று பதிவிட்டு வருகின்றனர்.
நீதா அம்பானியும் தனது இளைய மருமகளை கையை பிடித்துக் கொண்டு அழைத்து வருவதையும் அந்த வீடியோவில் பார்க்க முகிறது. இதனால் ராதிகா மெர்ச்சண்ட் கர்ப்பமாக இருக்கிறார் என்று பதிவிட்டு வருகின்றனர்.
கமெண்ட்ஸ் பிரிவில், பயனர் ஒருவர் ராதிகா மெர்ச்சண்ட் கர்ப்பமாக இருக்கிறாரா என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர் “ ராதிகா கண்டிப்பா கர்ப்பமாக தான் இருக்கிறார். அந்த தட்டையான காலணி, வயிற்றில் உள்ள கை, நிதா அம்பானியின் கூடுதல் அன்பு ஆகியவை அதை தெளிவாக காட்டுகிறது” என்று பதிவிடுட்ள்ளார்.
இதே போல் மற்றொரு பயனர் “ ராதிகா வயிற்றில் கை வைத்திருப்பதால், அவள் கர்ப்பமாக இருக்கலாம்" என்று கருத்து தெரிவித்தார்.
ஒரு மாதம் காலை உணவை தவிர்த்தால் உடலில் என்ன நடக்கும்? தெரிஞ்சுக்க இதை படிங்க!
திருமணமாகி இரண்டு மாதங்கள் தான் ஆகிறது என்று சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலரோ அவருக்கு சேலையில் நடப்பதில் சிரமம் இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். நீதா அம்பானி மருமகளை கவனித்துக் கொள்வது குறித்து பல்வேறு கருத்துகளை மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
ராதிகாவும் ஆனந்த் அம்பானியும் ஒன்றாகப் படித்த நண்பர்கள் ஆவர். இருவரும் காதலித்து வந்த நிலையில், இந்த ஜோடி. இந்த ஆண்டு ஜூலை 12ம் தேதி இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த இந்த திருமணத்தில் திரை பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சர்வதேச தொழிலதிபர்கள் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.