10 நிமிடத்தில் சுவையான கேரட் சாதம் இப்படி செய்ங்க.. செமையா இருக்கும்!

By Kalai SelviFirst Published Sep 9, 2024, 2:50 PM IST
Highlights

Carrot Rice Recipe : இந்த கட்டுரையில் கேரட் சாதம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

மதியம் வெரைட்டி சாதம் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா? அப்போ உங்க வீட்டில் கேரட் இருக்கிறதா? அப்படியானால் அதில் கேரட் சாதம் செய்து சாப்பிடுங்கள். இந்த சாதம் சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். மேலும் இந்த சாதம் செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது. ஈசியாக செய்துவிடலாம். முக்கியமாக, இது ஆரோக்கியமானதும் கூட. இந்த சாதத்தை மதியம் டிபன் பாக்ஸ் இருக்கு குழந்தைகளுக்கு அடித்துக் கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள் கூட இந்த சாதத்தை செய்து சாப்பிடலாம். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் கேரட் சாதம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  தேங்காய் பாலும், பட்டாணியும் வச்சு இப்படி ஒருமுறை பிரியாணி செஞ்சு பாருங்க... அடிக்கடி இதைத்தான் செய்வீங்க!

Latest Videos

கேரட் சாதம் செய்ய தேவையான பொருட்கள் :

சாதம் - 2 கப் (உதிரியாக வடித்தது)
கேரட் - 2 (துருவியது)
பிரியாணி இலை - 1
கிராம்பு - 3
பட்டை - 1
ஏலக்காய் - 1
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 1 ஸ்பூன்
முந்திரி - 7
நெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு

இதையும் படிங்க:  கல்யாண வீட்டு சுவையான பிரிஞ்சி ரைஸ்..இனி வீட்டிலும் செய்யலாம்..ரெசிபி இதோ!

செய்முறை :

கேரட் சாதம் செய்ய முதலில், ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் முந்திரியை போட்டு பொன்னிறமாக அவரது தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதே கடாயில் இருக்கும் எண்ணெயில் கிராம்பு, பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி கொள்ளுங்கள். பிறகு அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து ஒருமுறை கிளறி விடுங்கள். பின் அதில் துருவி வைத்த கேரட்டை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் மல்லித்தூள் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். சிறிது நேரம் கழித்து அதில் ஏற்கனவே எடுத்து வைத்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். இறுதியாக வறுத்து வைத்த முந்திரியை தூவுங்கள் அவ்வளவுதான் சுவையான கேரட் சாதம் ரெடி.

கேரட் நன்மைகள் :

கேரட்டில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. இவை ரத்த அழுத்தத்தை குறைக்கும், கண்பார்வையை கூர்மையாக்ககும், ஆற்றலை அதிகரிக்கும், எலும்புகளை உறுதியாக்கும். அதுமட்டுமின்றி, கேரட்டில் ஜூஸ் செய்து தினமும் காலை வெறும் வயிற்றில் அதை குடித்து வந்தால், சருமம் பளபளக்கும். அதுமட்டுமின்றி, கேரட்டில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதைதொடர்ந்து சாப்பிட்டு வரலாம். மேலும் இது புற்றுநோய் உருவாவததைத் தடுக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!