Vazhaipoo Sambar Recipe : இன்றைய கட்டுரையில் வாழைப்பூ சாம்பார் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
சைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் குழம்புகளில் ஒன்று சாம்பார். சாம்பாரில் வெங்காய சாம்பார், தக்காளி சாம்பார், முருங்கைக்காய் சாம்பார், கத்தரிக்காய் சாம்பார் என பல வகைகள் உண்டு. அந்த வகையில், இன்றைய கட்டுரையில் நாம் வாழைப்பூ சாம்பார் செய்வது பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.
இதுவரை நீங்கள் வாழைப்பூவில் கூட்டு பொரியல் வடை செய்துதான் சாப்பிட்டு இருக்கிறீர்கள் என்றால், ஒருமுறை வாழைப்பூவில் சாம்பார் செய்து சாப்பிடுங்கள். இந்த வாழைப்பூ சாம்பார் சற்று வித்தியாசமான சுவையில் சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த வாழைப்பூ சாம்பார் செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது சுலபமாக செய்துவிடலாம். முக்கியமாக இந்த சாம்பார் ஆரோக்கியமானதும் கூட.
அதுவும் குறிப்பாக பெண்களின் உடல் உள்ள பிரச்சனைகளுக்கு ரொம்பவே நல்லது. ஒருமுறை இந்த சாம்பாரை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வாழைப்பூ சாம்பாரை நீங்கள் சூடான சாதத்திற்கு வைத்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். மேலும் இதை சாதம் மட்டுமின்றி தோசை, இட்லி ஆகியவற்றுடனும் சாப்பிடலாம். சரி வாங்க இப்போது வாழைப்பூ சாம்பார் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: நாவூறும் சுவையில் மாங்காய் சாம்பார்.. ரெசிபி இதோ..!
வாழைப்பூ சாம்பார் செய்ய தேவையான பொருட்கள் :
வாழைப்பூ - 1 கப் (பொடியாக நறுக்கியது)
துவரம் பருப்பு - 2 கப்
புளி கரைசல் - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 4
சின்ன வெங்காயம் - 7
தக்காளி - 1 ( பொடியாக நறுக்கியது)
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: 2 தக்காளி போதும் டேஸ்டான சாம்பார் ரெடி.. ஒருமுறை செஞ்சு பாருங்க திரும்பத் திரும்ப செய்வீங்க!
செய்முறை :
வாழைப்பூ சாம்பார் செய்ய முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் எடுத்து வைத்த துவரம் பருப்பை நன்கு கழுவி குக்கரில் சேர்க்கவும். இதனுடன் மஞ்சள் தூள், 2 கப் தண்ணீர் மற்றும் 1 ஸ்பூன் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து குக்கரை மூன்று விசில் விட்டு இறக்கவும்.
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் மஞ்சள் தூள், சாம்பார் பொடி மிளகாய் தூள், பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு, வாழைப்பூ ஆஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். பின் அதில் புளிக் கரைசல் சேர்க்கவும். அடுத்து அதில் வேக வைத்த பருப்பை தண்ணீருடன் சேர்த்து சுவர் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். இறுதியாக பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும் அவ்வளவுதான் ருசியான வாழைப்பூ சாம்பார் ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D