அட்டகாசமான சுவையில் காலிஃபிளவர் ரைஸ்... ஈசியா செய்ய ரெசிபி இதோ!!

By Kalai SelviFirst Published Sep 7, 2024, 2:04 PM IST
Highlights

Cauliflower Rice : குழந்தைகள் விரும்பி சாப்பிடும் காலிஃபிளவர் ரைஸ் செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

எப்பவும் மதியம் உணவாக சாதம் சாம்பார், ரசம், புளிக்குழம்பு, கூட்டு, பொரியல் என்று சாப்பிட்டு உங்களுக்கு போரடித்து விட்டதா? வித்தியாசமான சுவையில் ஏதாவது சாப்பிட விரும்புகிறீர்களா? அதுவும் வெரைட்டி ரைஸாக. அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான். பொதுவாக, வெரைட்டி ரைஸில் பல வகைகள் உண்டு. உதாரணமாக, சிக்கன் ரைஸ், பன்னீர் ரைஸ், முட்டை ரைஸ், வெஜ் ரைஸ் என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் இன்றைய கட்டுரையில், நாம் பார்க்கப் போகும் ரெசிபி காலிஃப்ளவர் ரைஸ். இந்த ரைஸ் இதுவரை நீங்கள் சாப்பிட்டதில்லை என்றால் இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். 

காலிஃப்ளவர் ரைஸ் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். முக்கியமாக, இந்த ரெசிபி செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது எளிதில் செய்து விடலாம். ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த காலிபிளவர் ரைஸ் செய்து கொடுங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ரைசை நீங்கள் மதியம் டிபன் பாக்ஸிற்கு கூட எடுத்துச் செல்லலாம். பேச்சுலர்கள் கூட இந்த ரைஸ் செய்து சாப்பிடலாம். சரி வாங்க இப்போது இந்த கட்டுரையில் காலிபிளவர் ரைஸ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். 

Latest Videos

இதையும் படிங்க:  தேங்காய் பாலும், பட்டாணியும் வச்சு இப்படி ஒருமுறை பிரியாணி செஞ்சு பாருங்க... அடிக்கடி இதைத்தான் செய்வீங்க!

காலிஃப்ளவர் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள் :

சாதம் - 2 கப் (உதிரியாக வேகவைத்து எடுத்தது)
காலிஃபிளவர் - 1
வேக வைத்த பட்டாணி - 1 கப்
பெரிய வெங்காயம் - 3 (நீளமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
தக்காளி - 4 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
காஷ்மீர் மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

வறுத்து பொடி செய்ய :

கொத்தமல்லி விதை - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 1/2 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
கசகசா - 1/4 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 1
ஏலக்காய் - 1
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
வரமிளகாய் - 7

இதையும் படிங்க:  அசத்தலான சுவையில் மீல்மேக்கர் பிரியாணி!!

செய்முறை :

காலிஃப்ளவர் ரைஸ் செய்ய முதலில் எடுத்து வைத்த காலிஃப்ளவரை நறுக்கி சூடான தண்ணீரில் போட்டு சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சோம்பு போட்டு தாளிக்கவும். பின் அதில் நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் அதில் நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை நன்கு வதக்கவும். பிறகு அதில் நறுக்கிய காலிஃப்ளவரை சேர்த்து ஒரு முறை கிளறிவிட்டு, பிறகு ஒரு தட்டால் பாத்திரத்தை மூடி வைக்கவும். அடுப்பை குறைவான தீயில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதனை அடுத்து, ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் வறுத்து பொடி செய்வதற்குரிய பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு நன்கு வறுக்கவும். பிறகு அதை அடுப்பிலிருந்து இறக்கி, ஆற வைக்கவும் அவை நன்றாக ஆறியதும் அதை மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் காலிஃப்ளவர் உடன் மிளகாய் தூள் வேகவைத்து எடுத்த பட்டாணி, தயாரித்து வைத்த மசாலா ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு வதக்கவும். மசாலா நன்கு வதங்கியதும், அதில் உதிரியாக வடித்து வைத்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் நெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி ஒரு முறை கிளறி விடுங்கள். அவ்வளவுதான் ருசியான காலிபிளவர்  சாதம் ரெடி.

இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!