கர்ப்பிணி பெண்களே... மழைக்காலத்தில் இந்த மாதிரியான உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...!

By Kalai Selvi  |  First Published Jul 24, 2024, 11:43 AM IST

Monsoon Diet For Pregnant Women in Tamil : மழைக்காலத்தில் தொற்று நோயை தவிர்க்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.


பருவமழை காலம் ஆரம்பமாக போகிறது. பருவ மழை வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிப்பதால், இந்த பருவம் மிகவும் இனிமையானது என்று சொல்லலாம். மேலும், இந்த பருவத்தில் பலர் தங்களது உணவு பழக்கங்களை மாற்றிக் கொள்கிறார்கள். உதாரணமாக, பக்கோடா அல்லது துரித உணவுகள் சாப்பிட விரும்புவார்கள்.

ஆனால், கர்ப்பிணி பெண்கள் இந்த பருவத்தில் தங்களை கவனித்துக் கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில், இந்த பருவத்தில் பல வகையான பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களால் கர்ப்பிணிகள் அடிக்கடி பல உடல்நல பிரச்சனைகளின் அபாயத்தை சந்திக்க நேரிடும். இது கருவின் ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கும். எனவே, கர்ப்பிணிகள் மழைக்காலத்தில் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். இத்தகைய சூழ்நிலையில், கர்ப்பிணி பெண்கள் மழை காலத்தில் எதை எல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க:  இந்த ஒரு பழம் போதும்... சுகமான மற்றும் வலியற்ற பிரசவத்திற்கு கேரண்டி!

மழைக்காலத்தில் கர்ப்பிணி பெண்கள்  சாப்பிடக்கூடாதவை:

1. பச்சையாக அல்லது குறைவாக சமைக்கப்பட்ட உணவுகள்:
கர்ப்பிணி பெண்கள் மழைக்காலத்தில் பச்சையாக அல்லது குறைவாக சமைக்கப்பட்ட இறைச்சி, முட்டையை சாப்பிட கூடாது. காரணம், மழை காலத்தில் இது போன்ற உணவுகளில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அதிகரிப்பதால், அவை கர்ப்பிணி பெண்களுக்கு மோசமான தீங்கை விளைவிக்கும்

2. தெரு உணவுகள்:
சாலை ஓரங்களில் விற்கப்படும் உணவுகள் சுகாதாரமற்றவை மற்றும் தொற்று நோய்கள் அதிகரிக்கும் ஆபத்து என்பதால், அவற்றை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

3. பச்சை இலை காய்கறிகள்:
மழைக்காலத்தில் கர்ப்பிணி பெண்கள் பச்சை இலை காய்கறிகளை சாப்பிடக்கூடாது. காரணம், பருவமழை காலத்தில் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றத்தால், பச்சை இலை காய்கறிகளில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சை வளர்ச்சி ஆபத்து அதிகரிக்கும். இது கர்ப்பிணி பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

இதையும் படிங்க:  சுக பிரசவம் ஆகனுமா...? அப்ப கர்ப்ப காலத்தில் தினமும் காலை 'இத' மட்டும் செய்ங்க..!

4. டீ காபி குடிப்பது தவிர்க்கவும்:
மழைக்காலத்தில் கர்ப்பிணி பெண்கள் டீ மற்றும் காபி குடிப்பதை அதிகமாக விரும்புகிறார்கள். ஆனால் இது தாய் மற்றும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் தீங்கு. ஏனெனில், அதிகப்படியான டீ அல்லது காபி குடிப்பது பிபி மற்றும் இதயத்துடிப்பு அதிகரிக்கச் செய்யும்.

5. பதப்படுத்தப்படாத பால் பொருட்கள்:
மழைக்காலத்தில் பேஸ்டுரைஸ் செய்யப்படாத பால் பொருட்களை சாப்பிடுவதை கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதில் லிஸ்டீரியா என்ற பாக்டீரியா உள்ளது. இது கர்ப்பிணி பெண்களுக்கும், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும்.

இவற்றை நினைவில் வையுங்கள்:

  • மழைக்காலங்களில் கர்ப்பிணி பெண்கள் வெளியே தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவி சாப்பிடுங்கள். 
  • அடிக்கடி கைகளைக் கழுவிக் கொண்டே இருங்கள். 
  • உங்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சினைகள் இருந்தால், உடனே மருத்துவரை அணுகவும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!