Heart Healthy Foods in Tamil : இதயம் ஆரோக்கியமாக இருக்க என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
நம் உடலின் மிக முக்கியமான உறுப்பு இதயம். நாம் உயிர் வாழ்வதற்கு இதயம் துடிப்பது மிகவும் அவசியம். இத்தகைய சூழ்நிலையில், நாம் நம் இதயத்தை மிகவும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால், தற்போது மாறிவரும் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தால் இதயம் தொடர்பான பல நோய்கள் வேகமாக மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது.
ஆனால், சில ஆரோக்கியமானவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதை குறைக்கலாம். இதய ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடன்ட்கள் உள்ள உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். ஏனெனில், இவை உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. எனவே, இந்த கட்டுரையில் இதயம் ஆரோக்கியமாக இருக்க என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: தினமும் காலை இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. ஆரோக்கியமாக இருப்பீங்க..!
இதை ஆரோக்கியத்திற்கு சாப்பிட வேண்டியவை:
1. அக்ரூட் பருப்புகள்:
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நார்ச்சத்து மற்றும் பிற கூறுகள் அக்ரூட் பருப்பு நிறைந்துள்ளது. எனவே, இதை சாப்பிடுவதன் மூலம் இதயம் தொடர்பான பிரச்சனைகளை சுலபமாக தவிர்க்கலாம். வால்நட் கொலஸ்ட்ரால் அளவை பெரிதும் குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, இது இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
2. பெர்ரிகள்:
இதய ஆரோக்கியத்திற்கு ஸ்ட்ராபெரி, ப்ளூபெர்ரி, பிளாக்பெரிகளை தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது. இவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. பெர்ரிகளில் நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை ஆக்ஸிஜனேற்றம் அழுத்தம் மற்றும் வீக்கத்தில் இருந்து பாதுகாக்கின்றது. மேலும், இதில் போதுமான அளவு நார்ச்சத்து காணப்படுகின்றது. இது இதயம் தொடர்பான நோய்களை குறைக்கவும் உதவுகிறது.
3. நல்ல கொழுப்பு நிறைந்த மீன்கள் சாப்பிடுங்கள்:
உங்களுக்கு தெரியுமா..கொழுப்பு நிறைந்த மீன்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே,
இதயம் தொடர்பான நோய்களை தவிர்க்க சால்மன், காணா கொத்தி, மத்தி, சூரை போன்ற மீன்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.
இதையும் படிங்க: தினமும் காலை குழந்தைகளுக்கு வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டிய 5 சூப்பர் ஃபுட் இதோ..!
4. டார்க் சாக்லேட்:
டார்க் சாக்லேட்டில் ஃபிளாவனாய்டு போன்ற ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இதயம் தொடர்பான நோய்களை குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கிறது.
5. கிரீன் டீ குடியுங்கள்:
கிரீன் டீயில் இருக்கும் பண்புகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட் பண்புகள் கொழுப்பை குறைக்க பெரிதும் உதவுகிறது.
6. பச்சை இலை காய்கறிகள்:
இரும்பு, கால்சியம், நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற சத்துக்கள் பச்சை இலை காய்கறிகளில் நிறைந்துள்ளது. இது இதய நோயை குறைக்க பெரிதும் உதவுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D