Relationship Tips : திருமணமான பெண்கள் கூகுளில் அதிகமாக என்ன தேடுகிறார்கள் என்பதைக் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு கேள்விக்கும் விடை தெரிய வேண்டுமானால் கூகுளை விட சிறந்தது எதுவுமில்லை. Google நம்முடைய கடினமான மற்றும் விசித்திரமான கேள்விகள் அனைத்திற்கும் பதிலை கொடுப்பது மட்டுமின்றி, நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவும் மாறியுள்ளது என்றே சொல்லலாம். மறுபுறம், சிலர் தங்களது பிரச்சினைகளுக்கு கூட தீர்வை காண கூகுளிடம் தான் செல்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் திருமணம் ஆன பெண்கள் கூகுளில் அதிகமாக என்ன தேடுகிறார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஏனெனில், திருமணத்திற்குப் பிறகு பெண்கள் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட கூகுளின் உதவியை நாடுகிறார்கள் என்று ஆய்வுகள் சொல்லுகின்றது. அவர்கள் அப்படி என்னதான் தேடுகிறார்கள் என்பதை ஆண்கள் தெரிந்தால் கண்டிப்பாக ஷாக் ஆவார்கள். எனவே, இது குறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: புதிதாக திருமணமான பெண்களே.. திருமண வாழ்க்கை ஹாப்பியா இருக்க.. கண்டிப்பா இந்த 4 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க
திருமணமான பெண்கள் கூகுளில் அதிகம் தேடுவது இவையே:
1. கணவரைப் பற்றி...
திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவர் தொடர்பான பல விஷயங்களை தேடுகிறார்கள். ஆம் இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. பொதுவாகவே, பெண்கள் தங்கள் கணவரின் விருப்பு வெறுப்புகள் குறித்து கூகுளில் அதிகமாக கேட்கிறார்களாம். எனினும், இதில் தவறு ஏதுமில்லை. ஏனெனில், திருமணத்திற்கு பிறகு ஒவ்வொரு பெண்ணும் தனது கணவருக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்ற கேள்வியால் குழப்பத்தில் இருக்கிறார்கள். இது போன்ற கேள்விகளை வேறு யாரிடமும் கேட்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில், அவர்களில் ஒரு ஆதரவு கூகுள் தான்.
2. கணவரை அடிமையாக்குவது...
இதை வாசிக்கும் போது கண்டிப்பாக உங்களுக்கு சிரிப்பு வரும். ஆனால், அதுதான் உண்மை. சில பெண்கள் தங்கள் கணவனை அடிமையாக்குவதற்கான வழிகள் என்ன என்பதை அறிய விரும்புகிறார்கள். அதுமட்டுமின்றி, திருமணத்திற்கு பிறகு பெண்கள் தங்கள் கணவர் எப்போது மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். இதனால் அவர்கள் உணவு வகைகளை தேடுவது மட்டுமல்லாமல், தங்கள் கணவருக்கு வெவ்வேறு பரிசு பொருட்களையும் தேடுகிறார்கள்.
இதையும் படிங்க: திருமணமானவர்கள் யாருக்கும் சொல்லவே கூடாத 5 விஷயங்கள் பத்தி தெரியுமா? மீறி பகிர்ந்தால் வாழ்க்கையே போச்சு!!
3. குழந்தை பெற்றுக் கொள்ள..
கணவரை கவர், குழந்தை பெற்றுக்கொள்ள எந்த மாதம் சரியானது, இளமையாக இருப்பது எப்படி என இதுபோன்ற கேள்விகளைக் கூகுளில் அதிகம் தேடுகிறார்கள்.
4. குடும்பத்தில் அங்கமாக மாறுவது...
இது தவிர சில பெண்கள் கணவரின் குடும்பத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். குறுகிய காலத்தில் எப்படி குடும்பத்தின் ஒரு அங்கமாக மாற வேண்டும் என்பதையும் அறிய ஆசைப்படுகிறார்கள். மேலும் குடும்ப பொறுப்புகளை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அறிய ஆர்வமாக இருக்கிறார்கள். அதே சமயம், சில பெண்கள் தங்கள் மாமியாரை மகிழ்ச்சியாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் கூகுளில் அதிகம் தேடுகிறார்கள்.