உங்க குழந்தையை இப்படி பழக்கப்படுத்துங்க.. லைப்ல நல்லா இருப்பாங்க!!

By Kalai Selvi  |  First Published Aug 1, 2024, 2:08 PM IST

Kids Intelligence Habits : குழந்தைகளுக்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள பழக்கங்களை சொல்லிக் கொடுங்கள். அவர்கள் மிகவும் அறிவாளிகளாகவும், கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.


உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல உயர்ந்த பதவியில் இருக்க வேண்டும் என்றால், அவர்களது அறிவுத்திறன் நன்றாக இருக்க வேண்டும். சிக்கலை தீர்த்து வைப்பது, கல்வித்திறன் மற்றும் அறிவாற்றல் திறன் ஆகியவை அவர்களது வெற்றிகரமான எதிர்காலத்திற்கான அடித்தளம். எனவே, குழந்தைகளை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். குறிப்பாக, குழந்தைகள் காலையில் என்ன பழக்கங்களை கடைப்பிடிக்கிறார்கள் என்பது மிகவும் அவசியம். அந்தப் பழக்கங்களை தொடர்ந்து கவனித்து வரவும். எனவே, இந்த கட்டுரையில் குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை அதிகரிக்க சில பழக்கவழக்கங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

குழந்தைகள் கடைபிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள்:

Tap to resize

Latest Videos

1. ஆரோக்கியமான காலை உணவு:
ஆரோக்கியமான உணவுகள் மூளைக்கு ஆற்றலை அளிக்கின்றது மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை பராமரிக்கும். எனவே தினமும் காலை உங்கள் குழந்தைகளுக்கு முழு தானியங்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட பழக்குங்கள்.

2. காலை உடற்பயிற்சி:
காலை எழுந்ததும் உடற்பயிற்சி செய்தால் மூளைக்கு ரத்த ஓட்டம் சரியாக நடக்கும். இது செறிவு மற்றும் மன விழிப்புணர்வு அதிகரிக்கிறது. எனவே உங்கள் குழந்தைகளை ஜாக்கின் மற்றும் ஏதாவது ஒரு உடற்பயிற்சியில் ஊக்குவிக்கவும்.

3. சேர்ந்து படிக்கவும்:
நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் ஒன்றாக வாசிப்பது அவர்களின் புரிந்து கொள்ளுங்கள் மற்றும் அறிவாற்றல் திறனை மேம்படுத்தும். எனவே, வயதுக்கு ஏற்ப புத்தகங்களை தேர்ந்தெடுத்து காலையில் சிறிது நேரம் படிக்க பழக்குங்கள்.

இதையும் படிங்க:  Parenting Tips : உங்கள் குழந்தை எதுக்கெடுத்தாலும் அழுதா? அப்போ இப்படி டேக் கேர் பண்ணுங்க!

4. தியானம்:
தியானம் மனதை அமைதிப்படுத்தும். எனவே, இதை உங்கள் குழந்தை பின்பற்றுவதன் மூலம், உங்கள் குழந்தையின் மன அழுத்தம் குறையும். எனவே இதை கண்டிப்பாக குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.

5. இலக்கு:
எளிய மற்றும் எதார்த்தமாக அடையக்கூடிய இலக்கை அமைக்க குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். இந்தப் பயிற்சி அவர்களின் திட்டமிடல் திறனில் உதவுவதுடன் சரியான திசையிலும் பாதையிலும் செல்ல உதவும்.

இதையும் படிங்க:  ஸ்கூலுக்கு டைம் ஆச்சு.. ஆனா இன்னும் உங்க குழந்தை  தூங்கிட்டு இருக்கா? அப்ப இந்த டிப்ஸ பாலோ பண்ணுங்க

6. மொபைலில் இருந்து ஒதுக்கி வையுங்கள்:
குழந்தைகளின் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும், அவர்களது கவன சிதறலைத் தடுக்கவும் காலையில் மொபைல், லேப்டாப் டிவி போன்றவற்றிலிருந்து விலக்கி வையுங்கள். மேலும் அதற்கான நேரத்தையும் திட்டமிடுங்கள்.

7. செயல்பாடுகளை ஊக்குவிக்கவும்:
உங்கள் குழந்தைக்கு வரைதல், எழுதுதல் அல்லது கைவினை திறன் இருந்தால் அவர்களை அதில் ஊக்குவிக்கவும். ஏனெனில், இது சிந்திக்கும் ஆற்றலையும், பிரச்சனைகளை தீர்க்கும் திறனையும் அதிகரிக்கச் செய்யும்.

8. சுதந்திரமாக பேசுங்கள்:
நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் சுதந்திரமாக பேசும் போது அவர்கள் தங்கள் மனதில் உள்ள விஷயங்களை உங்களுக்கு தெரிவிப்பார்கள். இதன் மூலம் அவர்கள் தைரியமாக வாழ கற்றுக் கொள்வார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!