தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த ஸ்பெஷல் டீ குடிங்க... எக்கச்சக்கமான நன்மைகள் கிடைக்கும்!!

By Kalai Selvi  |  First Published Aug 1, 2024, 8:00 AM IST

Lemon And Honey Tea Benefits : தினமும் காலை வெறும் வயிற்றில் லெமன் மற்றும் தேன் கலந்த டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.


காலை எழுந்ததும் ஒரு கப் டீயுடன் தங்கள் நாளை தொடங்குபவர்கள் பலரும் உண்டு. டீ காபி இல்லாமல் அவர்களால் எந்த வேலையும் செய்ய முடியாது. ஏன் இன்னும் சிலரோ டீ காபி குடிக்காமல் இரவு தூங்க கூட மாட்டார்கள். காலையில் டீ குடிப்பதற்கு புத்துணர்ச்சியாகவும், சுவையாகவும் இருந்தாலும் அது நம் வயிற்றிற்கு நல்லதல்ல. 

உண்மையில், காலையில் வெறும் வயிற்றில் தீ குடிப்பதால் வயிற்றில் வாயு பிரச்சனையை ஏற்படுத்தும். இந்த பிரச்சனை பிறகு அமிலத்தின் வடிவத்தை எடுக்கும். எனவே, வெறும் வயிற்றில் டீ காபி குடிக்க கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதன் காரணமாக மலச்சிக்கல், தலைவலி போன்ற பிரச்சனைகளை கூட சந்திக்க நேரிடும். இந்நிலையில், காலையில் எந்த பிரச்சினையும் இல்லாமல் நீங்கள் டீ குடிக்க விரும்பினால், உங்களுக்காக இன்றைய கட்டுரையில் ஒரு டீ பற்றி சொல்லப் போகிறோம். இப்பொழுது அது குறித்து இங்கு பார்ப்போம்.

Tap to resize

Latest Videos

எலுமிச்சை மற்றும் தேன் கலந்த  டீ:
காலையில் பல சூடான நீரில் எலுமிச்சை அல்லது தேன் கலந்து குடிப்பதை வழக்கமாக்கி உள்ளனர். ஆனால், எலுமிச்சை மற்றும் தேன் கலந்த  டீ குடிப்பது நாள் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல், உங்களுக்கு வயிற்று பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

எலுமிச்சை தேன் கலந்த டீ தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை பழம் - 1
தேன் - 1 ஸ்பூன்
கருப்பு மிளகு - 2
ஏலக்காய் - 1
தண்ணீர் - 2 கப்

தயாரிக்கும் முறை:
இந்த டீ தயாரிக்க முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு கப் தண்ணீரை ஊற்றி சூடாக்கவும். பிறகு ஏலக்காய் மற்றும் கருப்பு மிளகை நன்கு இடித்து, தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விடவும். பிறகு அதில் எலுமிச்சை சாறு மற்றும் 2 ஸ்பூன் தேன் சேர்க்கவும். சுமார், இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். பிறகு அதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.

இதன் நன்மைகள்:

  • எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்.
  • சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
  • முடி உதிர்வதை தடுக்கிறது.
  • சிறுநீரகத்தக்மற்றும் ஆரோக்கியமாக வைக்கும்.
  • இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

முக்கிய குறிப்பு: இந்த டீயை நீங்கள் அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த டீயை நீங்கள் ஒரு நாளைக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டுமே குடிக்க வேண்டும்.

click me!