Herbal Teas For PCOS : இங்கு கொடுக்கப்பட்டுள்ள 5 மூலிகைக்கு நிர்வகிக்கவும், ஹார்மோன்களை சமநிலையில் வைப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இன்றைய காலகட்டத்தில் பெண்களிடையே பிசிஓஎஸ் பிரச்சினை வேகமாக அதிகரித்து வருகின்றது. பெரும்பாலான பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்படுகின்றன. பிசிஓஎஸ் என்பது ஹார்மோன்கள் தொடர்பான ஒரு தீவிர பிரச்சனையாகும். அதாவது, பெண்களின் உடலில் இருக்கும் ஹார்மோன்களின் சமநிலை சீர்குலைவதால் இந்த பிரச்சனை வரும்.
மேலும், பெண்களிடம் ஆண்கள் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்து ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி குறையும். அதுமட்டுமின்றி பிசிஓஎஸ் காரணமாக, பெண்களின் உடலில் தேவையற்ற முடி, ஒழுங்கற்ற மாதவிடாய், முகப்பருக்கள், பதட்டம் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை அவர்கள் சந்திப்பார்கள். அதுவும் குறிப்பாக, இது கர்ப்ப காலத்தில் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். எனவே, பிசிஓஎஸ் ஐ சரியான முறையில் கவனித்து, அதற்கான சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியம்.
ஆனால், சில மூலிகை டீயை குடிப்பதன் மூலம் இந்த பிசிஓஎஸ் பிரச்சனையை சமாளிக்க முடியும் என்று ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். எனவே, இந்த கட்டுரையில் பிசிஓஎஸ் சமாளிக்க 5 மூலிகை டீக்களைக் குறித்து இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: PCOS பிரச்சினை உள்ள பெண்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய சூப்பர் ஃபுட்கள் இதோ..!
பிசிஓஎஸ்-க்கு 5 மூலிகை டீ:
1. ஸ்லியர்மின்ட் டீ:
இந்த டீ புதினா டீ அல்லது ஸ்லியர்மின்ட் டீ என்று அழைக்கப்படுகிறது. உங்களுக்கு உயர்ந்த டெஸ்டோஸ்டிரோன், ஹிர்சுட்டிசம் (முகம் மற்றும் முதுகில் அதிகப்படியான முடி) மற்றும் அண்டவிடுப்பதில் சிக்கல் இருந்தால் இந்த டீ உங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், இந்த டீ அண்டவிடுப்பை ஊக்குவிக்கிறது மற்றும் ஆண்ட்ரோஜன்களை குறைக்க பெரிதும் உதவுகிறது. எனவே, தினமும் காலை இதை குடியுங்கள்.
2. கிரீன் டீ:
பிசிஓஎஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுவார்கள். எனவே, இன்சுலின் எதிர்ப்பை குறைப்பதிலும், டெஸ்டோஸ்டிரோன் அளவை குறைப்பதிலும் இந்த டீ அற்புதமாக செயல்படும். எனவே, பிசிஓஎஸ் -ஆல் உடல் எடை அதிகம் உள்ள பெண்கள் காலையில் ஒரு கப் கிரீன் டீ உடன் உங்கள் நாளை தொடங்குங்கள்.
இதையும் படிங்க: PCODயால் முகப்பரு வருதா..? அப்ப இந்த 3 பொருட்களை இளநீரில் கலந்து குடிங்க!
3. இஞ்சி டீ:
இன்று பெண்களின் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்த பெரிதும் உதவுகிறது. ஏனெனில், இதில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. பிடிப்புகள் மனநிலை மாற்றங்கள் மற்றும் தலைவலி போன்றவற்றை கட்டுப்படுத்த இது உதவுகிறது. எனவே, காலை அல்லது மாலையில் இஞ்சி டீ குடியுங்கள். கூடுதலா நன்மைக்காக நீங்கள் இதில் எலுமிச்சை சாறு அல்லது தேனையும் சேர்க்கலாம்.
4. இலவங்கப்பட்டை டீ:
இந்த டீ உயர் ரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை குறைப்பதில் அற்புதமாக செயல்படுகிறது. மேலும், இது உடல் எடையை குறைக்கவும், மாதவிடாய் சீராக இருக்கவும் உதவுகிறது. இதில் காஃபின் இல்லாததால் நீங்கள் விரும்பும் போதெல்லாம் ஒரு கப் குடிக்கலாம்.
5. லைக்கோரைஸ் ரூட் டீ:
இந்த டீ உயர்ந்த டெஸ்டோஸ்டிரோன் அளவை குறைக்கும் ஒரு அற்புதமான மூலிகை டீயாகும். இது குடிப்பதற்கும் சுவையாகவும் இருக்கும். மேலும் இது உங்க பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. உயர் ரத்த அழுத்தத்தை இது குறைக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D