மழைக்காலத்தில் தினமும் பூண்டு சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!

By Kalai Selvi  |  First Published Jul 31, 2024, 8:00 AM IST

Garlic Health Benefits in Monsoon : மழைக்காலத்தில் தினமும் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.


மழைக்காலத்தில் அனைவரும் உணவு விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அந்த வகையில் மழைக்காலத்தில் தினமும் பூண்டு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் தெரியுமா?

பூண்டில் வைட்டமின் பி6, சி மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம்  போன்ற சத்துக்கள் உள்ளது. அதுமட்டுமின்றி, இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் பண்புகள் உள்ளதால், மழைக்காலத்தில் ஏற்படும் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று பாதிப்புகள் இருந்து பாதுகாக்கும். மேலும், பூண்டு சாப்பிட்டால் பிபி கட்டுப்படுத்தப்படும், இதய நோய் அபாயம் குறையும், மற்றும் சளி தொண்டை வலி போன்ற பிரச்சனைகளை சமாளிக்கும். எனவே, மழைக்காலத்தில் தினமும் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

Latest Videos

undefined

இதையும் படிங்க: தினமும் 4 பல் பூண்டை இப்படி சாப்பிடுங்க! ஆண்களின் பாலியல் பிரச்சனை முதல்..பல பிரச்சனைகளுக்கு குட் பை சொல்லுங்க

மழைக்காலத்தில் தினமும் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

  • பூண்டில் இருக்கும் அல்லிசின் என்ற தனிமம் நோய் எதிர்ப்பு சக்தியை வழிபடுத்தி, நோய் தொற்றுகளுக்கு எதிராக உடலை பாதுகாக்க பெரிது உதவுகிறது.
  • பூண்டில் ஆன்டிவைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால், மழை காலத்தில் ஏற்படும் சளி, இருமல் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • மழைக்காலத்தில் பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் வயிற்றில் வலி, வாயு, வீக்கம் போன்ற பிற செரிமான பிரச்சனைகளையும் நீக்கும்.
  • மழைக்காலத்தில் பூஞ்சை தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் இதை தடுக்க, தினமும் பூண்டு சாப்பிடுங்கள். ஏனெனில், பூண்டில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. எனவே பூண்டு உங்களுக்கு நன்மை பயக்கும்.
  • அதுபோல மழைக்காலத்தில் தவறான உணவுப் பழக்கத்தால் உடலில் நச்சுகளின் அளவு அதிகரிக்கும். எனவே, அவற்றால் ஏற்படும் ஆபத்தை தடுக்க பூண்டை தினமும் சாப்பிடுங்கள்.

இதையும் படிங்க:  ஈசியான முறையில் பூண்டு தோல் உரிக்க..5 நிமிடத்தில் தோசை கல்லை சுத்தம் செய்ய.. பயனுள்ள வீட்டுக் குறிப்புகள் இதோ!

மழைக்காலத்தில் பூண்டை எப்படி சாப்பிட வேண்டும்?

  • தினமும் காலை வெறும் வயிற்றில் ஒன்று அல்லது இரண்டு பச்சை பூண்டை சாப்பிடுங்கள். இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வயிற்று பிரச்சனைகள் ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
  • ஒருவேளை, உங்களுக்கு பூண்டை பச்சையாக சாப்பிட பிடிக்கவில்லை என்றால் தேனுடன் சேர்த்து சாப்பிடுங்கள். காரத்தன்மை தெரியாது.
  • அதுபோல ஒரு கிளாஸ் தண்ணீரில் சில பூண்டு பற்களை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பின் வடிகட்டி அந்த நீரை குடியுங்கள்.
  • இரவு பதூங்கச் முன் ஒரு கிளாஸ் நீரில் மூன்று பூண்டு பற்களை நன்கு நசுக்கி, ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் பூண்டுடன் தண்ணீரையும் சேர்த்து குடிக்கலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!