ஆண்கள் நினைக்குற மாதிரி இல்லை.. செக்ஸுக்கும் அவங்களுக்கும் இது தான் தொடர்பு.. அந்த 1 விஷயம் முக்கியம்

By Asianet Tamil  |  First Published Jul 30, 2024, 9:00 PM IST

Sexless Marriage  : கணவன் மனைவிக்கு இடையே உடல் உறவு முக்கியம். ஆனால் திருமணமான ஆண் தன் மனைவியிடம் உடல் உறவில் இல்லாமல் இருந்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.


கணவன் மனைவி உறவு காதல் எவ்வளவு முக்கியமோ அதே அளவு உடல் உறவு மிகவும் அவசியம். எனவே தம்பதிகள் இருவரும் தங்கள் பாலியல் வாழ்க்கையை கவனம் செலுத்த வேண்டும். ஆனால், சில சமயங்களில் ஒருவர் உடலுறவில் ஆர்வம் காட்டலாம், மற்றவரு ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். இதனால் இருவருக்கிடையே நெருக்கம் படிப்படியாக குறையும், பிரச்சனைகள் அதிகரிக்கும். அதுவும் குறிப்பாக, ஆண்கள் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதே நிறுத்தினால் அவர் தீவிரமான மனசோர்வு அடையலாம். 

திருமணத்திற்கு பிறகு ஒரு ஆண் உடலுறவில் இல்லாமல் இருக்கும் போது அவனது வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். ஏனெனில், உடலுறவு அவனது உறவை முன்னோக்கி நகர்த்தியதில் முக்கிய பங்கு வகிக்கிறது. திருமணத்திற்கு பிறகு ஆண் பெண் இருவரும் உடலுறவு கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில், இது அன்பை அதிகரிக்கும் மற்றும் மன அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இந்த கட்டுரையில் திருமணமான ஆண் தன் மனைவியிடம் உடல் உறவில் இல்லாமல் இருந்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க:  ஆண்களே உங்க செக்ஸ் ஹார்மோன் ஒழுங்கா வேலை செய்யுதா? இப்பவே கவனிக்கலன்னா அந்த நேரம் கஷ்டம்!

திருமணமான ஆண் உடல் உறவில் ஆர்வம் இல்லாமல் இருந்தால் ஏற்படும் மாற்றங்கள்:

1. ஒழுக்க கேடான உறவுக்கு:
திருமணத்திற்கு பிறகு ஒரு ஆண் தனது மனைவியிடம் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால் ,அவன் வெளியே வேறொரு பெண்ணிடம் தவறான உறவில் இருக்க வாய்ப்புகள் அதிகம். மேலும், நெருக்கத்தை ஏற்படுத்தும் அனைத்து நம்பிக்கைகளும் இழக்கப்படும் போது ஆணுக்கு வேறு வழி இல்லை.

2. அதிருப்தி:
கணவன் மனைவி உறவில் செக்ஸ் தாண்டி, வேலைக்கு முன்னுரிமைகள் கொடுக்கப்படும் போது உறவில் பரஸ்பர விருப்பு வர தொடங்குகிறது மேலும், உடலிறவில் அவரது மனைவி தூங்கிவிட்டால், செக்ஸில் ஈடுபட முடியாமல் அவன் கோபம் கொள்கிறான். எரிச்சல் அடைகிறான்.

இதையும் படிங்க:  செக்ஸ்ல பாதுகாப்பு முக்கியம் பாஸ்!!  இந்த 8 விஷயம் பண்ணாம செக்ஸ் வைக்கவே கூடாது!

3. உணர்ச்சி இணைப்புக்கு இடமில்லை:
உடலுறவு இல்லாத திருமணத்தில் ஆண் தனது மனைவி உணர்ச்சிவசப்பட விரும்புவதில்லை. ஏனெனில், திருமண பந்தத்தை சிறப்பாக பேணுவதில் காதலும், உடலுறவும் மிகவும் அவசியம். 

4. மன அழுத்தம் அதிகரிக்கும்:
உடலுறவு கொண்டவர்களுக்கு மன அழுத்தம் குறைவாக இருக்கும் என்று ஆராய்ச்சி சொல்கிறது. ஆனால் திருமண வாழ்க்கையில், செக்ஸ் இல்லையென்றால் ஒரு மனிதனின் வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகரிக்க தொடங்குகிறது. இதனால் திடீர் கோபமும் எரிச்சல் ஏற்படும். படிப்படியாக அவன் தனது வாழ்க்கையில் மற்ற அம்சங்களில் கவனம் செலுத்த முடியாமல் போகும்.

5. மனசோர்வு பதட்டம்:
ஒரு ஆணுக்கு தனது திருமண வாழ்க்கையில் பாலியல் திருப்தி இல்லை என்றால், அவனுக்கு மனசு ரொம்ப பதட்டம் ஏற்படும். மனநல பிரச்சனைகளை கட்டுக்குள் வைத்திருக்க பாலியல் திருத்தி மிகவும் அவசியம். மேலும், இது விறைப்புத்தன்மை போன்ற பிற உடல்நிலை பிரச்சினைகளுக்கும் வழிவகுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!