Smoking Affect Female and Male Fertility : நானும் என் மனைவியும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருப்பதால் குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏதேனும் ஏற்படுமா? இன்று புலம்பும் ஆணுக்கு நிபுணர் சொல்லும் பதில் இங்கே..
கேள்வி: நான் 26 வயது இளைஞன் எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. எனக்கு புகை பிடிக்கும் பழக்கமும் இருக்கிறது. நான் ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து சிகரெட் புகைப்பேன். இந்நிலையில், தற்போது நானும் என் மனைவியும் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறோம். இதனால் என் மனைவி என்னை புகை பிடிப்பதை நிறுத்த செல்கிறாள். புகை பிடிப்பது ஆண் மற்றும் பெண் கருவுறுதலில் ஏதேனும் தீங்கு விளைவிக்குமா? கொஞ்சம் சொல்லுங்களேன்.
நிபுணர் பதில் : ஆம், புகைபிடித்தல் உங்கள் ஆரோக்கியத்தை மட்டுமல்ல உங்கள் பாலியல் வாழ்க்கையையும் பாதிக்கிறது என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதன் விளைவுகள் ஆண், பெண் இருவருக்கும் காணப்படும். புகை பிடிக்கும் பழக்கத்தால் உங்களது குழந்தையின் எடை குறைவாக இருக்கும் என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளது. இது தவிர, இன்னும் பிற பிரச்சனைகளையும் நீங்கள் சந்திக்க நேரிடும். அது குறித்து தெளிவாக இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமா..? அப்ப உடனே இந்த பழத்தின் விதையை சாப்பிடுங்க!
ஆணின் கருவுறுதலை பாதிக்கும்:
அளவுக்கு அதிகமாக புகைபிடிக்கும் ஆண்களது விந்தணு கலவையில் மோசமான மாற்றங்கள் ஏற்படும் .புகைபிடிக்கும் பழக்கம் விந்தணுவிற்கு விஷத்திற்கு சமம். இதன் விளைவாக விந்தணுவின் முட்டையை உற்பத்தியாகும் திறன் முடிவடையும்.
புகை பிடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்:
உங்களுக்கு தெரியுமா.. புகையிலையில் உற்பத்தி செய்யப்படும் நிகோடின், கருவுறுதலை மோசமாக பாதிக்கும்.
இவையே புகை பிடிப்பதால் ஏற்படும் மோசமான விளைவுகள்.
இதையும் படிங்க: ஆண்களே! இது போன்ற உணவுகளை சாப்பிடாதீங்க.. அந்த பிரச்சினை வரும்!!
புகை பிடிப்பதால் பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்பு:
புகை பிடிப்பதால் பெண் கருவுறாமைக்கான வாய்ப்புகள் 60% அதிகரிக்கும் என்று ஆய்வுகள் சொல்கிறது. சொல்லப் போனால் புகை பிடித்தல் கர்ப்பத்தை தடுக்கும். ஒருவேளை கர்ப்பம் தரித்தால், அது குழந்தைக்கு சிக்கலை உண்டாக்கும். மேலும் புகைபிடித்தல் கர்ப்பிணிப் பெண்ணின் இரத்த ஓட்டத்தில் பிரச்சனைகளை உண்டாக்கும்.
புகை பிடிப்பதால் குழந்தைக்கு ஏற்படும் ஆபத்து:
புகைப்பிடிப்பது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு மோசமான தீங்கு விளைவிக்கும். அதுமட்டுமின்றி, பெண்களுக்கு குறைப்பிரசவம் உண்டாகும் மற்றும் உடல் குறைபாடுகளுடன் குழந்தையை பெற்றெடுக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. புகைப்பிடிக்கும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தையின் இறப்பு விகிதம் அதிகம் ஏற்படும் என்று ஆய்வுகள் சொல்லுகிறது.
கர்ப்பப்பை புற்றுநோய் வரும்:
புகை பிடிப்பதால் கர்ப்பப்பையில் மாற்றங்கள் ஏற்பட்டு, கர்ப்பப்பை புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும். மேலும் சிகரத்தில் உள்ள ரசாயனங்கள் கர்ப்பப்பையில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அளவுகளை ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும் இதன் காரணமாக கருத்தரிப்பது பாதிக்கப்படும்.
மலட்டுத்தன்மை ஏற்படும்:
புகைப்பிடிப்பது இதயம் சிறுநீரகம் நுரையீரல் போன்றவற்றை சேதப்படுத்துவது மட்டுமின்றி ஆண்களின் விந்தணுக்களையும் சேதப்படுத்தும். முக்கியமாக, ப ஆண் பெண் என இருவருக்கும் புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால், மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D