Clove Tea Benefits : கிராம்பு டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
பெரும்பாலான மக்கள் காலை எழுந்ததும் ஒரு கப் டீயுடன் தங்கள் நாளை தொடங்க விரும்புகிறார்கள். அது அவர்களது வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. பெரும்பாலான வீடுகளில் பலவகையான டீயை குடிப்பார்கள். அந்த வகையில், கிராம்பு டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
ஆம், கிராம்பு டீஆற்றல் பானத்தை விட குறைவானது அல்ல என்றே சொல்லலாம். ஏனெனில், இந்த டீ குடிப்பதற்கு சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் குறிப்பாக, குளிர்காலத்தில் கிராம்பு டீ குடித்தால் இருமல், சளி போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். எனவே, குளிர்காலத்தில் கிராம்பு டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: Toothache : பல் வலிக்கு சிறந்த தீர்வு இந்த எண்ணெய் தான்.. வீட்டிலேயே செய்யலாம்!
குளிர்காலத்தில் கிராம்பு டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
1. சளி இருமலை குணமாக்கும்:
குளிர்காலத்தில் பெரும்பாலானோர் சளி இருமலால் அவதிப்படுவார்கள். இதற்காக அவர்கள் பல வகையான மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். ஆனால், கிராம்பு டீ இந்த பிரச்சனையை சுலபமாக சமாளிக்கும் திறனைக் கொண்டது. உண்மையில், கிராம்பு டீயில் ஆன்டிவைரஸ், ஆன்ட்டி செப்டிக் போன்ற பண்புகளின் நல்ல மூலமாகும். இவை தொற்று நோய்களை எதிர்த்து போராட உதவுகின்றது மற்றும் சளி இருமலில் இருந்து நிவாரணம் அளிக்க பெரிதும் உதவுகிறது.
2. பல் வலிக்கு நல்லது:
கிராம் டீ பல்வலி இருந்து நிவாரணம் அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உண்மையில், கிராம்புகளில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் பல் வலியிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. எனவே, கிராம்பு டீயை தொடர்ந்து குடித்து வந்தால் விரைவில் பல் வலியில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள்.
இதையும் படிங்க: கிராம்பு நீரால் இத்தனை பயன்களா? பல நோய்களுக்கும் தீர்வு!
3. செரிமானத்திற்கு நல்லது:
உணவை சரியான முறையில் ஜீரணிக்க கிராமத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் உணவு சாப்பிட்டு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் கழித்து கிராமத்தில் குடித்தால், செரிமான செயல்முறை ஆரோக்கியமாக இருக்கும். இது அஜீரணம், வாயு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இருந்து நிவாரணம் முடிக்க உதவும்.
4. சருமத்தை இளமையாக வைக்கும்:
கிராம்பு டீயை தொடர்ந்து குடித்து வந்தால் சரும பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஏனெனில், கிராம்புகளை கிருமிநாசினிகள் உள்ளது. இது உடலில் இருக்கும் நச்சுக்களை அகற்றும் மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும். இது தவிர கிராம்பு டீ எடையையும் குறைக்க உதவுகிறது.
5. நோய் எதிர்ப்பு சக்தி வலுவடையும்:
குளிர்காலத்தில் கிராம்பு டீ குடித்தால் உடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுவடையும். உண்மையில், கிராம்பு டி யில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது உடலின் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த பெரிதும் உதவுகிறது. எனவே, கிராம்பு டீயை தினமும் குடித்து வந்தால் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் உங்களை தாக்காது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D