Safe Sex in Tamil : ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான உடலுறவுக்கு மருத்துவர்கள் சொல்லும் இந்த ஆலோசனையை பின்பற்றுங்கள். அவை..
கேள்வி: நான் 28 வயது பெண். ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறேன். நான் மூன்று வருடங்களாக என் காதலனுடன் நேரடி உடலுறவில் இருக்கிறேன். மேலும், நாங்கள் அடிக்கடி உடலுறவு வைத்துக் கொள்வோம். என்னுடைய சந்தேகம் என்னவென்றால், நாங்கள் எப்போதும் பாதுகாப்பாக உடலுறவு வைத்துக் கொண்டாலும், உடலுறவு பற்றி சில பொதுவான நம்பிக்கையால் நான் குழப்பதில் இருக்கிறேன். ஆகையால், பாதுகாப்பான உடலுறவு பற்றி சரியா ஒரு தகவலை எனக்கு சொல்லுங்கள்.
நிபுணர் பதில்: பாதுகாப்பான உடலுறவு உங்களை பாலியல் நோய்கள் மற்றும் தேவையற்ற கர்ப்பத்தில் இருந்து உங்களை பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி, உங்களுக்காக சில பாதுகாப்பான உடலுறவுக்கான முறைகளை சொல்லுகிறேன். அவற்றை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் எந்த ஒரு குழப்பமுமின்றி, செக்ஸை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்.
இதையும் படிங்க: ஆண்களே உஷார்! யாராவது இந்த 'செக்ஸ்' பொய்களை சொன்னால் நம்பி ஏமாறாதீங்க!!
பாதுகாப்பான ஆணுறை:
பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறை மிகவும் சிறந்த தேர்வாகும். எனவே, நீங்கள் உடலுறவு கொள்ளும் போது உங்கள் காதலனை கண்டிப்பாக ஆணுறையை பயன்படுத்தச் சொல்லுங்கள். ஏனெனில், ஆணுறையானது தேவையற்ற கர்ப்பத்தை தடுப்பது மட்டுமின்றி, எய்ட்ஸ் போன்ற பிற பால்வினை நோய்களில் இருந்தும் உங்களை பாதுகாக்கும்.
லூப்ரிகேஷ்ன் காண்டம்:
உடலிறவின் போது லூப்ரிகேஷ்ன் காண்டம் பயன்படுத்துங்கள். இது ஆணுறை உடைவதை தடுக்கும் மற்றும் பயன்படுத்துவதை எளிதாக்கும்.
விந்தணு வெளியேறுதல்:
உடலுறவு போது கிளைமாக்ஸ் அடையும்போது ஆண்கள் விந்து வெளிவரும் ஒரு முறையை பின்பற்றுகிறார்கள். ஆனால், அந்த முறை மிகவும் பாதுகாப்பானது அல்ல. ஆண்களின் விந்தணு பிறப்புறுப்பில் விழாமல் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் கர்ப்பம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
இதையும் படிங்க: செக்ஸுக்கு முன்பு இந்த ஒரு விஷயத்தை மட்டும் பண்ணவே பண்ணாதீங்க! அப்புறம் உங்க துணை மதிக்கவே மாட்டாங்க!
கருத்தடை மாத்திரை:
கருத்தடை மாத்திரையை நீங்கள் அவசர காலங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், அதை அடிக்கடி பயன்படுத்தும் போது மோசமான தீங்கு விளைவிக்கும். மேலும் இதன் பயன்பாடு ஆனது 72 மணி நேரத்திற்குள் இருக்கும். அதாவது, பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு மூன்று நாட்களுக்குள். எனவே, எவ்வளவு சீக்கிரம் இதை பயன்படுத்துகிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் உங்களுக்கு நல்லது.
மாதவிடாய் சமயத்தில்:
மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது பாதுகாப்பானது. ஏனெனில், இந்த காலகட்டத்தில், கருத்தரிக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால், இதற்கு உங்களது மாதவிடாய் சுழற்சியை புரிந்து கொள்வது மிகவும் அவசியம். இதன் மூலம் தேவையற்ற கர்ப்பத்தில் இருந்து உங்களை பாதுகாப்பாக இருக்க முடியும்.
துணையிடம் நேர்மையாக இருங்கள்:
நீங்கள் உங்கள் துணையிடம் செக்ஸ் விஷயத்தில் நேர்மையாக இருப்பதன் மூலம் உங்களது செக்ஸ் வாழ்க்கை மிகவும் சிறப்பாக அனுபவிக்க முடியும் மற்றும் பால்வினை நோய்களின் அபாயத்தையும் குறைக்க முடியும்.
கருத்தடை ஊசி:
கருத்தடைக்கு நீங்கள் ஒரு கருத்தடை ஊசியை பயன்படுத்தலாம். ஆனால், நீங்கள் ஒரு மகளிர் மருத்துவ நிபுணரிடம் கலந்து ஆலோசித்த பிறகு அதை பயன்படுத்துங்கள்.
வாய்வழி செக்ஸ் வேண்டாம்:
வாய்வழி செக்ஸில் பலவகையான தொற்று நோய்களின் ஆபத்து அதிகமாக இருப்பதால், இதை தவிர்ப்பது நல்லது. இந்த உறவு மூலம் புற்றுநோய் மற்றும் பரவு நோய்களுக்கு நீங்கள் ஆளாகலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D