Male Sex Hormones : ஆண்களுக்கு செக்ஸ் ஹார்மோன்கள் குறைவதால் ஏற்படும் அறிகுறிகள் என்ன.. அதனால், ஆண்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலியல் ஹார்மோன்கள் மிகவும் முக்கியம். செக்ஸ் ஹார்மோன்கள் பற்றாக்குறையால் நிறைய உடல்நலப் பிரச்சினைகள் தோன்றும். அந்தவகையில், ஆண்களுக்கு செக்ஸ் ஹார்மோன்கள் குறைவினால் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன, அதனால், அது ஆண்களுக்கு என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
செக்ஸ் ஹார்மோன்கள் என்றால் என்ன?
செக்ஸ் ஹார்மோன்கள் என்பது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்கள் ஆகும். இது ஆண் உடலில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஹார்மோனால் ஆண்களுக்கு செக்ஸ் டிரைவ் அதிகரித்து, குறையும். இத்தகைய சூழ்நிலையில், ஆண் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்கள் குறையும் போது, அது உடலை ரொம்பவே பாதிக்க ஆரம்பிக்கும். மேலும், ஆண்கள் பல பிரச்சினைகளை சந்திப்பார்கள். அதுமட்டுமின்றி, ஆண்களின் இந்த செக்ஸ் ஹார்மோன்கள் குறைபாடு இருந்தால், பல அறிகுறிகள் காட்டும்.
இதையும் படிங்க: ஆண்களுக்கு 'அந்த' பிரச்சனை இருப்பதைக் குறிக்கும் அறிகுறிகள் இவையே!
பாலியல் ஆசை இல்லாமல் இருக்கும்:
ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் இல்லாதபோது, அவர்களுக்கு உடலுறவுக்கு ஆசை இருக்காது. இந்த ஹார்மோன்கள் இல்லாததால், ஆண்கள் உடலுறவைத் தவிர்க்க தொடங்குவார்கள். மேலும், இது அவர்களின் உறவை மிகவும் மோசமாக பாதிக்கும். பாலியல் ஆசை இல்லாதது, ஆண்களால் உற்சாகமாக இருக்க முடியாது.
இதையும் படிங்க: பெண்கள் உடலுறவுக்கு மறுக்க காரணங்கள் இத்தனையா? இதுக்கெல்லாமா வேண்டாம்னு சொல்றாங்க!
அதிக அழுத்தம்:
டெஸ்டோஸ்டிரோன் குறைப்பாடு காரணமாக, ஆண்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவான். மன அழுத்தத்தை எடுத்துக்கொள்வது பாலியல் ஆசையை குறைக்கும். மேலும், ஆண்களால் சரியாக உடலுறவு கொள்ள முடியாது. இதன் காரணமாக விந்துணுக்களின் எண்ணிக்கையும் குறையும் உடலை மிகவும் மோசமாக பாதிக்கும்.
நினைவாற்றல் இழப்பு:
ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு இருந்தால் அது அவர்களின் நினைவாற்றலையும் மோசமாக பாதிக்கும். சொல்லப்போனால் அவர்களது நினைவாற்றல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். வயது அதிகரிக்கும் போது பெரும்பாலான ஆண்களுக்கு நினைவாற்றல் பாதிக்கப்படுவதற்கு டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு தான் காரணம்.
தசை பலவீனம்:
ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு என்றால் ஆண்மை குறைவு ஏற்படும். மேலும், இதனால் அவர்களின் தசைகளில் இது ஒரு பெரிய விளைவையும் ஏற்படுத்தும். அதாவது இந்த குறைபாட்டால் அவர்களது தசை வலிமையாக இருக்காமல் மிகவும் பலவீனம் அடையத் தொடங்கும்.
அடிக்கடி மனநிலை மாற்றங்கள்:
ஆண்களின் உடலில் செக்ஸ் ஹார்மோன் மிகவும் குறைவாக இருந்தால் அவர்களின் மனநிலை அடிக்கடி மாற தொடங்கும். அதாவது இந்த ஹார்மோன் அவர்களுக்கு இல்லாததால் அவர்களின் உணர்ச்சி மாற்றங்கள் தொடங்குகின்றன. மேலும் இந்த ஹார்மோன் உடலில் இருந்து குறைய தொடங்கும் போது அது அவர்களின் உடலை மோசமான விளைவை ஏற்படுத்தும். இதனால் அவர்கள் எரிச்சல் அடையலாம் பதட்டமாகவும் எப்போதும் அமைதியற்றவராகவும் இருக்கலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D