Mother-in-law vs Daughter-in-law Relationship : உங்கள் மாமியார் ஊடான உறவை வலுவாகும் சிறப்பாக வைத்திருக்க விரும்பினால், அந்த உறவின் எல்லைகளை நீங்கள் நன்கு புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
உறவுகளில் மிகவும் சிக்கலான உறவு எதுவென்றால் அது மாமியார் மருமகள் உறவு தான். உண்மையில், மாமியார் மருமகள் இடையிலான உறவு சில சிக்கல்களால் சூழப்பட்டுள்ளது. மேலும் இந்த உறவை நிர்வகிப்பது ரொம்பவே சவாலானது. ஆனால், ஞானத்தால் இந்த உறவுக்கு இனிமையை சேர்க்கலாம். இதற்கு மிகவும் முக்கியமான விஷயம் வார்த்தைகளின் சரியான தேர்வு. ஆம், சில நேரங்களில் நாம் நம்மை அறியாமல் சில விஷயங்களை சொல்லுவது எதிரில் இருக்கும் நபரின் மனதை புண்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் மாமியாருடன் உங்கள் உறவை மேம்படுத்த விரும்பினால் கண்டிப்பாக இந்த 7 விஷயங்களை கூறுவதை தவிர்க்கவும். அவை..
மாமியாரிடம் சொல்லக்கூடாத 7 விஷயங்கள்:
undefined
1. உங்களுக்கும் உங்கள் மாமியாருக்கும் இடையே ஏதாவது பிரச்சனை நடந்தால் அந்த சமயத்தில், உங்கள் மாமியாரை பார்த்து, 'நீங்கள் ஒன்னும் என் அம்மா இல்லை' என்று ஒருபோதும் கோபத்தில் சொல்லி விடாதீர்கள். அந்த வார்த்தை அவர்களது மனதை ரொம்பவே புண்படுத்தும். இந்த வார்த்தை உங்கள் இருவருக்கும் இடையேயான பந்தத்தை முறியடிக்கும்.
2. நீங்கள் திருமணமாகி உங்களது கணவர் வீட்டுக்கு வந்தவுடன், புகுந்த வீட்டின் மரபுகள் பழக்க வழக்கங்களை மாமியார் எடுத்துச் செல்லும்போது, காது கொடுத்து கேளுங்கள். மாறாக,
எங்கள் வீட்டில் நாங்கள் இப்படி செய்வதில்லை என்று மாமியாரின் வார்த்தையை நிராகரிக்காதீர்கள். அது அவர்களை அவமானப்படுத்துவது போலாகிவிடும்.
3. உங்கள் மாமியார் உங்கள் கணவரை வளர்த்த விதம் பற்றி விமர்சிப்பது உங்களை பெரிய சிக்கலில் சிக்க வைக்கும். ஒருவேளை வளர்ப்பு குறித்து ஏதேனும் கவலை இருந்தால் உங்கள் மாமியாரிடம் எடுத்துச் சொல்லுங்கள். அதைத் தவிர, இது போன்ற வார்த்தைகளை நகைச்சுவையாக கூட பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
4. உங்களுக்கும் உங்கள் மாமியாருக்கும் இடையான உறவு வலுவாகி இருக்க ஒரு குறிப்பிட்ட இல்லை இருப்பது அவசியம் தான் ஆனால் அவர்களை ஒரேடியாக ஒதுக்கி வைக்காதீர்கள். இது உறவை சேதப்படுத்தும். முக்கியமாக, உங்களது வாழ்க்கையில் உங்கள் மாமியாரின் பங்கு இருக்க வேண்டும். எனவே ஏதாவது உங்கள் மாமியாரிடம் எதிர்பார்த்தாலோ அல்லது தெரிவிக்க வேண்டும் என்றாலோ அதை நாகரீகமாக வெளிப்படுத்துங்கள்.
5. நீங்கள் உங்கள் மாமியாரை பார்த்து நீங்கள் உங்கள் எல்லையை மீறுகிறீர்கள் என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். இது உறவை கெடுக்கும். மாறாக, நீங்கள் நினைப்பதை அல்லது சொல்ல விரும்புவதை தெளிவாக அவரிடம் சொல்லுங்கள்.
6. உங்கள் மாமியார் உங்களுக்கு ஏதாவது பரிசு கொடுத்தால், அது எனக்கு பிடிக்கவில்லை என்று ஒரு போதும் சொல்லவே சொல்லாதீங்க. குறிப்பாக, அன்புடன் கொடுக்கும் பரிசை விமர்சிப்பது அவர்களை இன்னும் புண்படுத்தும். ஒருவேளை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்களது மனதை புண்படுத்தாமல் நடந்து கொள்ளுங்கள்.
7. உங்கள் மாமியார் உங்களை கட்டுப்படுத்துவதை விரும்பவில்லை என்றால், அது குறித்து நேரடியாக அவர் மீது குற்றம் சாட்டாமல், அமைதியான முறையில் பேசுங்கள்.