மக்களே...! தயவு செய்து ஊட்டிக்கு இப்ப போகாதீங்க....!

First Published May 9, 2018, 1:21 PM IST
Highlights
over crowd in ooty for summer holidays


மக்களே தயவு செய்து ஊட்டிக்கு இப்ப போகாதீங்க....!

ஆண்டு முழுக்க வேலை செய்துவிட்டு எப்படா லீவு கிடைக்கும் இந்த சம்மர் ஹாலிடேஸ்கு எங்காவது போகணுமே என பலரும் முன்கூட்டியே திட்டம் போட்டு இருப்பார்கள்.

இன்னும் மற்றவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எப்போது லீவு கிடைக்குமோ..கிடைத்தால் கண்டிப்பாக ஊட்டிக்கு எஸ்கேப் ஆக வேண்டியது தான் என மனதில் நினைத்தவாறு இருப்பார்கள்.

சரி விஷயத்துக்கு வரேன்....கோடை காலத்தில் ஊட்டிக்கு சென்று குளு குளு சில்னஸ் அனுபவிக்க யாருக்கு தான் பிடிக்காது..? ஆனால் இப்ப  ஊட்டிக்கு சென்றால் எப்படி இருக்கு தெரியுமா..?

பயங்கர போக்குவரத்து நெரிசல்

பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சாலையிலேயே   காத்திருக்க வேண்டிய நிலைமை.

அடுத்ததாக, கூட்ட நெரிசல்..

சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வத்துடன் கோடை விடுமுறை கழிக்க ஊட்டிக்கு படை எடுக்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க சம்மர் ஹாலிடேஸ் ஜாலியாக கழிக்க தமிழகம்  மட்டுமல்ல, கேரளா கர்நாடக ஏன் ஆந்திர மக்கள் கூட ஒரே  நேரத்தில்  ஊட்டிக்கு படை எடுக்கிறார்கள். இதனால் அதிக கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உருவாகி விடுகிறது

அதிக கட்டணம்

எந்த பொருள் வாங்கினாலும் அதிக கட்டணத்திற்கு  விற்கிறார்கள்...

உதராணம்:

ஒரு பொருளின் விலை ரூ.10  என்றால் இந்த தருணத்தை ரூ. 30 வரை உயர்த்தி விற்கப்படுகிறது

தங்குமிடம் :

ஊட்டி சென்று அங்கு தங்க நினைத்தால் அங்கு வசூலிக்கும் தொகையோ கொஞ்சம் நெஞ்சம் இல்லை....அதாவது அதிக டிமாண்ட் இருப்பதால், அவர்கள் இஷ்டத்திற்கு விலையை நிர்ணயம் செய்து விடுகிறார்கள்...

இத்தனையும் மீறி, காசு போனால் பரவாயில்லை, மகிழ்ச்சியாக இந்த தருணத்தை  கழிக்க வேண்டும் என நினைத்தாலும், அதிக கூட்ட நெரிசல் ஒருவிதமான கஷ்டத்தை கொடுக்கும் வகையில் அமைந்து விடுகிறது

எப்போ மழை வரும் எப்போ மழை வராது என எதையும் கணிக்க  முடியாது. திடீரென மழை வரும்...திடீரென மழை வராது. அதாவது காலநிலையை கணிக்க முடியாது.

சரி அப்படி என்றால், எப்போது தான் ஊட்டிக்கு செல்லலாம் என்ற  கேள்வி எழும் அல்லவா..?

ஜூலை முதல் நவம்பர் வரை

இந்த கால கட்டடத்தில் சென்றால், கூட்டம் இருக்காது.  கிளைமேட் கொஞ்சம் மாறி இருந்தாலும் போதுமான சில்னஸ் இருக்கும். கூட்டம் இருக்காது. பொருட்களின் விலை மற்றும் தங்குமிடம் அனைத்தும்  குறைவான தொகையில் கிடைக்கும்

டிசம்பர் முதல் பிப்ரவரி வரை

புதுமண தம்பதிகளுக்கு தகுந்த நேரம்....

அழகான பொழுது, அதிக பனி படர்ந்த இடங்கள், மேகக்கூட்டங்கள் என  பார்க்கும் போதே வெகு ரசனையாக இருக்கும்....

பனிபொழிவு அதிகமாக காணப்படும் அந்த தருணத்தில் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியான  தருணம் அமையும்.

click me!