தாத்தாவானார் முகேஷ் அம்பானி!! முதல் மகன் ஆகாஷ் அம்பானிக்கு குட்டி தேவதை பொறந்தாச்சு... வைரல் வீடியோ!!

Published : Jun 01, 2023, 05:29 PM ISTUpdated : Jun 01, 2023, 05:30 PM IST
தாத்தாவானார் முகேஷ் அம்பானி!! முதல் மகன் ஆகாஷ் அம்பானிக்கு குட்டி தேவதை பொறந்தாச்சு... வைரல் வீடியோ!!

சுருக்கம்

முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை காண அம்பானியின் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு சென்ற வீடியோ வைரலாகியுள்ளது. 

உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்கு பிள்ளைகள் 3 பேர். தந்தையின் தொழிலில் மூவருமே இணைந்து செயல்பட்டு வருகின்றனர். அம்பானி குழுமம் கால் வைக்காத துறையே இல்லை. எல்லா தொழிலிலும் கால் தடம் பதித்துள்ளனர். அம்பானியின் ஒவ்வொரு பிள்ளைகளும் ஒவ்வொரு தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். 

முகேஷ் அம்பானிக்கு முதலாவதாக ஆகாஷ் அம்பானி மற்றும் இஷா அம்பானி என இரட்டை குழந்தைகள் தான் பிறந்தனர். அடுத்த பிறந்தவர் ஆனந்த் அம்பானி. முதல் மகனான ஆகாஷ் அம்பானிக்கும், ஸ்லோகா மேத்தாவுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, ஏற்கனவே ப்ரித்வி என்ற ஆண் குழந்தை உள்ளது. ஸ்லோகா மேத்தா 2022இல் இரண்டாவதாக கருவுற்றிருந்தார். அவருக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. நேற்றைய தினம் முகேஷ் அம்பானி - நிதா அம்பானியின் குடும்பத்திற்கு ஒரு அழகான நாள். 

மும்பையில் உள்ள சர் எச்என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தான் ஸ்லோகா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளார். ஆகாஷ் அம்பானிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவருக்கு, பல்வேறு பிரபலங்களும் உறவினர்களும் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

இன்னும் சில காலத்தில் திருமணம் செய்யவுள்ள ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் இருவரும் மருத்துவமனைக்கு ஜோடியாக வந்து அம்பானி வீட்டு குட்டி தேவதையை பார்த்து சென்றனர். அவர்கள் மட்டுமல்ல.. இஷா அம்பானி, ஆனந்த் பிரமல், முகேஷ் அம்பானி ஆகியோரும் மருத்துவமனைக்குச் சென்று தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இதை ஒரு வைரல் வீடியோ காட்டுகிறது. 

அந்த வீடியோவில், ஆனந்த் அம்பானி தனது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சண்டுடன் மருத்துவமனைக்கு வருவதைக் காணலாம். ஆனந்த் பிரமல், முகேஷ் அம்பானி மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியேறுவதைக் காணலாம்.அம்பானி குடும்பத்தைத் தவிர, பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூரும் தனது சகோதரர் குணால் ராய் கபூருடன் தனது காரில் ஷ்லோகா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானியைப் பார்க்க வந்தார். 

இந்த ஆண்டு ஏப்ரலில் மும்பையில் நிதா முகேஷ் அம்பானி கலாச்சார மையம் (என்எம்ஏசிசி) தொடங்கும் போது, ​​ஷ்லோகா மேத்தா இரண்டாவது கர்ப்பம் பற்றிய செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: பேரக்குழந்தைக்கு அரணாக மாறிய அம்பானி.. சித்திவிநாயகர் கோயில் தரிசனத்தில் நிகழ்ந்த சுவாரசியம்!!

ஆகாஷ் அம்பானியும் ஷ்லோகா அம்பானியும் மார்ச் 2019ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அவர்களது திருமணத்திற்கு முன்பே கோவாவில் நிச்சயதார்த்தத்தின்போது கொண்டாட்டம் தொடங்கியது. ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தா மும்பையில் ஆடம்பரமான விழாக்களில் அடிக்கடி கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Bread Omelette for Breakfast : காலை உணவாக பிரட் ஆம்லெட் சாப்பிட்டுறது நல்லதா? தொடர்ந்து சாப்பிடுவறங்க இதை கவனிங்க
Push-Ups : இந்த '1' உடற்பயிற்சியை தினமும் காலைல பண்ணாலே 'உடலில்' பல மாற்றங்கள் வரும்